அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் இன்று

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சட்டசபையில் இன்று...சட்டசபையில், இன்று கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கைகளின் மீது, விவாதம் நடக்க உள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.குடிநீர் திட்ட பாதிப்பை சரி செய்ய கோரிக்கைஎதிர்க்கட்சி

சட்டசபையில் இன்று...

சட்டசபையில், இன்று கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கைகளின் மீது, விவாதம் நடக்க உள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.


குடிநீர் திட்ட பாதிப்பை சரி செய்ய கோரிக்கை

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: சேலம் மாவட்டத்தில், மேச்சேரி - நங்கவல்லி கூட்டுக் குடிநீர் திட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், இருப்பாளி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றில், 14 மணி நேரம் மின் மோட்டார் இயக்கப்பட்டு, தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டது.

தற்போது, மின் மோட்டாரை எட்டு மணி நேரம் மட்டுமே இயக்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். கேட்டால் மேலிடத்து உத்தரவு என்கின்றனர். கலெக்டரிடம் தெரிவித்தேன்; அவர் பொறியாளர்களை அழைத்து பேசினார். மின் மோட்டார் இயக்கப்படும் நேரம் குறைக்கப் பட்டதால், முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே இயக்கப்பட்டது போல, 14 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் கூறியதில் உண்மை இருக்கும் என்றால், அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; முன்பிருந்த சூழல் உருவாக்கப்படும்.


காரைக்குடி மாநகராட்சி: காங்., வலியுறுத்தல்

சட்டசபையில், காங்., - எம்.எல்.ஏ., மாங்குடி பேசியதாவது:காரைக்குடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு மகளிர் கலைக் கல்லுாரி அமைத்து தர வேண்டும். தேவகோட்டை நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அங்கு ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, செவிலியர் பயிற்சி கல்லுாரி துவக்க வேண்டும்.

அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், சுயநிதிப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


கோவில்களுக்கு ஒளியேற்ற ரூ.130 கோடி

அ.தி.மு.க., - முனுசாமி: ஹிந்துக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, 1,000 கோடி ரூபாய் செலவில், கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, தி.மு.க., சார்பில் அறிவிக்கப் பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த, எவ்வளவு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது?

ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதும், 100 கோடி ரூபாயை, பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அடுத்தாண்டு மானிய கோரிக்கையின் போது, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் மேற்கொள்வோம். இருளில் உள்ள, 12 ஆயிரத்து, 487 கோவில்களின் கருவறைகளை, வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு, 130 கோடி ரூபாயை, முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X