காலாண்டு வரி செலுத்த அவகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலாண்டு வரி செலுத்த அவகாசம்

Added : ஆக 24, 2021
Share
சென்னை:தமிழகத்தில் உள்ள வாடகை வாகனங்களுக்கான, இரண்டாம் காலாண்டு வரியை அபராதம் இன்றி செலுத்த, ஜூன் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் வேண்டும் என, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன.இதையேற்ற தமிழக அரசு, செப்டம்பர் வரை அபராதமின்றி காலாண்டு வரி

சென்னை:தமிழகத்தில் உள்ள வாடகை வாகனங்களுக்கான, இரண்டாம் காலாண்டு வரியை அபராதம் இன்றி செலுத்த, ஜூன் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் வேண்டும் என, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன.இதையேற்ற தமிழக அரசு, செப்டம்பர் வரை அபராதமின்றி காலாண்டு வரி செலுத்த அவகாசம் அளித்துள்ளது. இதற்கான உத்தரவை, அரசின் கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X