அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகிகள் மீது வக்கிர குற்றச்சாட்டு விசாரணை குழு அமைத்தார் அண்ணாமலை

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:பா.ஜ., நிர்வாகி மீதான வக்கிர 'வீடியோ' பதிவு வெளியான நிலையில், நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, மாநில செயலர் மலர்கொடி தலைமையில் விசாரணை குழு அமைத்து, மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். குற்றங்களில் உள்ள உண்மையை கண்டறிந்து, நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.'வீடியோ' பதிவுதமிழக பா.ஜ.,

சென்னை:பா.ஜ., நிர்வாகி மீதான வக்கிர 'வீடியோ' பதிவு வெளியான நிலையில், நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, மாநில செயலர் மலர்கொடி தலைமையில் விசாரணை குழு அமைத்து, மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

குற்றங்களில் உள்ள உண்மையை கண்டறிந்து, நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


'வீடியோ' பதிவு

தமிழக பா.ஜ., மாநில பொதுச் செயலர் கே.டி.ராகவன் பற்றிய வக்கிர 'வீடியோ' ஒன்று,சமூக வலைதளங்களில் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

சமூக ஊடகத்தில் வெளியான, கட்சியின் மாநில பொதுச் செயலர் கே.டி.ராகவன் சம்பந்தப் பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட, 'யூடியூபர்' மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்து பேசியது உண்மை.கட்சி அலுவலகத்தில் முதல் முறை சந்தித்த போது, கட்சி பொறுப்பில் இருப்போர் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனே அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும், அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக் கூடாது. உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தேன்.ஆனால் அவர், வீடியோ பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார்.

அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, உடனே நியாயம் கிடைக்குமா; நடவடிக்கை எடுக்கப்படுமா; உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், வீடியோ பதிவுகளை வெளியிட போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே, என் பதிலில், 'செய்து கொள்ளுங்கள்' என, சுருக்கமாக முடித்து விட்டேன்.இன்று காலை, ராகவனிடம் பேசினேன். தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச் சாட்டு என்றும், சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியின் மாண்பு கருதி, கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். நானும் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன்.

இதுபோல, வேறு பல நபர்களின் பதிவுகளும் வெளி வர இருக்கிறது என, மதன் சொல்லி இருப்பது, அவருக்கு ஏதேனும் ஓர் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது, ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.


நடவடிக்கை

பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பா.ஜ., பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள், மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றனர். மிகுந்த மரியாதையுடன் நடத்தப் படுகின்றனர்.கட்சியின் மாண்பு கருதி, இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த, பா.ஜ., மாநில செயலர் மலர்கொடி தலைமையில் விசாரணை குழு அமைத்து, வீடியோ பதிவுகளில் உள்ள உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடியோ பதிவின் இறுதியில், தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஒரு சில நபர் தான் காரணம் என, மதன் கூறியிருக்கிறார். அதற்கு பா.ஜ., எப்படி பொறுப்பேற்க முடியும். அவரவர் செயலுக்கும், அவரவர் நடவடிக்கைக்கும் அவரவர் தான் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பதவி விலகினார் கே.டி.ராகவன்கே.டி.ராகவனின் 'டுவிட்டர்' பதிவு:தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.இன்று காலை, சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு 'வீடியோ' வெளிவந்ததை அறிந்தேன். என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன்.

நான் என் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன்; தர்மம் வெல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
25-ஆக-202112:19:33 IST Report Abuse
Milirvan தமிழகத்திலுள்ள பல கட்சிகளின் தலை, செயல், பொறுப்பு, அங்கம், உறுப்புக்களை விட பிஜேபியின் பொறுப்பிலுள்ளவர்கள் பலமடங்கு மேலானவர்கள் என்பது நிச்சயம்.. பாரபட்சமின்றி ஒப்பு நோக்குங்கள்.. புரியும்.. ஆனால் ஒன்று.. பிஜேபி, அல்லது ஹிந்து பெரியவர்களை பற்றி ஏதாவது புகார் என்றால் சாக்கடை கரப்புக்களைபோல கிளம்பி வரும் கருத்துக்கக்கிகள், மற்ற மத கட்சிகளின் கேவலங்களை பற்றி வரும்போது, அது தனி மனிதரின் செயல்பாடு என்று பம்மி வாலை சுருட்டி கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு ஓடி விடுவது ஏன்..?
Rate this:
Kovai Raj - newport,யுனைடெட் கிங்டம்
25-ஆக-202118:51:50 IST Report Abuse
Kovai Rajநியூஸிலாந்து போயும் உனக்கு புத்தி வரவில்லையே ,அங்கெ இருக்கவே நீ தகுதி இல்லாதவன். உதிர்ப்பிரதேசக்கோ அல்லது குஜராத்துக்கோ ஓடிப்போயிரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X