கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தி.மு.க., வழக்கு பைசல்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், விடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்ததை அடுத்து, தி.மு.க., சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை:தமிழகத்தில், விடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்ததை அடுத்து, தி.மு.க., சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பழங்குடியின மக்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தி.மு.க., தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உரிய அவகாசத்தில் தேர்தல் நடத்தக் கோரி, தி.மு.க., தரப்பிலும் முறையிடப்பட்டது.இதை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 2017 நவம்பர், 17க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டது.

தேர்தலுக்கான அறிவிப்பை செப்., 18க்குள் வெளியிடவும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, செப்., 18க்குள் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்காததால், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் கமிஷனுக்கு எதிராக, தி.மு.க., தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கிய அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பகுதிக்கான தேர்தல், 2020 ஜனவரியில் நடத்தப் பட்டது. மற்ற பகுதிகளுக்கான தேர்தலை, மாநில தேர்தல் கமிஷன் நடத்த உள்ளது,'' என்றார்.

மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, ''விடுபட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என்றார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து, அவமதிப்பு வழக்கு விசாரணையை முடித்து வைத்து, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X