அரசியல் செய்தி

தமிழ்நாடு

நுகர்பொருள் வாணிப கழக குளறுபடியால் அரசுக்கு இழப்பு

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை :''தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், நிர்வாகத் திறமையின்மையால், மத்திய அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய 2,000 கோடி ரூபாயை, பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தி.மு.க., ஆட்சியில் செயலிழந்து நிற்பது வேதனைக்குரியதாக உள்ளது. தற்போதைய நுகர்பொருள் வாணிப கழகத்தின்
நுகர்பொருள் வாணிப கழக குளறுபடி,அரசுக்கு இழப்பு

சென்னை :''தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், நிர்வாகத் திறமையின்மையால், மத்திய அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய 2,000 கோடி ரூபாயை, பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தி.மு.க., ஆட்சியில் செயலிழந்து நிற்பது வேதனைக்குரியதாக உள்ளது. தற்போதைய நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாகத் திறமையின்மையால், மத்திய அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய 2,000 கோடி ரூபாயை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசுக்காக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், வாணிப கழகத்துக்கு சொந்தமான மற்றும் தனியார் அரவை ஆலைகளில், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.இதற்காக, மத்திய அரசு சி.எம்.ஆர்., எனப்படும், நெல் அரவை மானியத் தொகையை தமிழகத்திற்கு வழங்குகிறது.

இதுவரை, அ.தி.மு.க., அரசு, மத்திய அரசிடம் தகவல்களை தெரிவித்து, மானியத்தை பெற்று, அதன் பலனை விவசாயிகளுக்கு அளித்து வந்தது.தற்போது தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கால், 2,000 கோடி ரூபாய் வரை, மத்திய அரசிடம் மானிய நிலுவைத் தொகை தேங்கியுள்ளது. மத்திய அரசின் மானியத்தை பெறுவதற்கான ஆவணங்களை, குறித்த காலத்தில், தி.மு.க., அரசு அனுப்பவில்லை என, சொல்லப்படுகிறது.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னுரிமை, அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவது குறித்த விபரங்கள், மத்திய உணவுத் துறையின் இணையதளத்தில், உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

ஆனால், தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை தொடர்பான விபரங்களை, வாணிப கழகம் வழங்காமல் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், இந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படாததால், நிதி விடுவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை, துாக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, துரித கதியில் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு உடனே எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Bharani - singapore,சிங்கப்பூர்
25-ஆக-202117:13:14 IST Report Abuse
S. Bharani ஹீரோ வில்லன் எனமாறி மாறி இரு கழகங்களும் மக்களை காமடியன் ஆக்கி பிழைப்பு நடத்துகின்றனர்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-ஆக-202115:40:49 IST Report Abuse
Pugazh V /அரசு அனுப்பவில்லை என, சொல்லப்படுகிறது. /நிதி விடுவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது// இதில் எதுவுமே ஆதாரப்பூர்வமான ஸ்டேட்மென்ட் இல்லை. ஒரு பத்திரிகை நிருபர் கூட என்ன ஏது என்று விசாரித்து விட்டு தான் செய்திக் கட்டுரை எழுதுவார்கள். இவர்... ?? முன்னாள் முதல்வராம்..// சொல்லப்படுகிறது.. செய்திகள் வருகின்றன// என்று தாயக்கட்டை உருட்டிக் கொண்டு பேசறார். இதெல்லாம் நாலு வருஷம் என்ன செய்திருக்கும் என்று இப்போது விளங்குகிறது.
Rate this:
Cancel
aravindhan - singapore,சிங்கப்பூர்
25-ஆக-202115:12:00 IST Report Abuse
aravindhan ஐயோ பாவம்...கடந்த வாரம் பிடித்த பதற்றம் இப்போது வரை இருக்கிறது. அரசியல் வாழ்க்கை போவிடுமா? இல்லை உள்ளே போகவேண்டிய நிலை வருமா என்ற சிந்தனையில் வந்த பதற்றத்தை பார்த்து அருகில் இருந்த ஒருவர் மட்டும் சிரித்துக்கொண்டிருந்தார். உள்ளூர சந்தோஷமாக இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X