பொது செய்தி

இந்தியா

ஹூப்பள்ளி நகருக்கு மகான்களின் பெயர்கள்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி நகரின், முக்கிய இடங்களுக்கு மகான்களின் பெயர் சூட்டப்படுகிறது. இங்குள்ள உனகல் ஏரிக்கு, 'சென்னபசவா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஹூப்பள்ளியின் முக்கியமான இடங்களுக்கு, மகான்கள், சுவாமிகளின் பெயர் சூட்டப்படுகிறது. இதற்கு முன், ஹூப்பள்ளி ரயில் நிலையத்துக்கு, ஸ்ரீசித்தாரூட ரயில்வே நிலையம் என பெயர் சூட்டப்பட்டது. தற்போது உனகல் ஏரிக்கு சென்னபசவா என,

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி நகரின், முக்கிய இடங்களுக்கு மகான்களின் பெயர் சூட்டப்படுகிறது.

இங்குள்ள உனகல் ஏரிக்கு, 'சென்னபசவா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஹூப்பள்ளியின் முக்கியமான இடங்களுக்கு, மகான்கள், சுவாமிகளின் பெயர் சூட்டப்படுகிறது. இதற்கு முன், ஹூப்பள்ளி ரயில் நிலையத்துக்கு, ஸ்ரீசித்தாரூட ரயில்வே நிலையம் என பெயர் சூட்டப்பட்டது.

தற்போது உனகல் ஏரிக்கு சென்னபசவா என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஹூப்பள்ளி -- தார்வாட் இரட்டை நகரங்களுக்கு இடையே உள்ள, உனகல் கிராமத்தின் ஏரி 750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது மிக சிறப்பான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.இதற்கு முன் ஹூப்பள்ளி நகருக்கு, இந்த ஏரியில் இருந்து தான், குடிநீர் வினியோகிக்கப்பட்டது. மல்லப்பிரபா நீர்ப்பாசன திட்டம் துவங்கிய பின், அதன்பின் உனகல் ஏரி பகுதி, சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

பசவண்ணரின் நெருங்கிய உறவினரான சென்னபசவா, இங்குள்ள மக்களுக்கு நல்வழி காண்பித்து, வாழ வைத்தவர். இதை நினைவு கூறும் வகையில், உனகல் ஏரிக்கு, சென்னபசவா என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஏரிக்கரையில் சென்னபசவா கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் உற்சவம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஆண்டு முழுவதும் இக்கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.சமீபத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், உனகல் ஏரி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ஏரிக்கு, சென்னபசவா என, பெயர் சூட்டும்படி பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X