பொது செய்தி

இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுற்றுப்பயணம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பெங்களூரு : முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கட்சியை பலப்படுத்தும் நோக்கில், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக புதிய கார் வாங்கியுள்ளார்.முதல்வர் பதவியை, ராஜினாமா செய்த பின் எடியூரப்பா, குடும்பத்தினருடன் ஓய்வாக காலம் கடத்துகிறார். வெளிநாட்டு சுற்றுலாவை முடித்து, நேற்று முன் தினம் பெங்களூரு திரும்பினார்.வரும் நாட்களில், வாரம் ஒரு மாவட்டம்

பெங்களூரு : முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கட்சியை பலப்படுத்தும் நோக்கில், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்காக புதிய கார் வாங்கியுள்ளார்.முதல்வர் பதவியை, ராஜினாமா செய்த பின் எடியூரப்பா, குடும்பத்தினருடன் ஓய்வாக காலம் கடத்துகிறார். வெளிநாட்டு சுற்றுலாவை முடித்து, நேற்று முன் தினம் பெங்களூரு திரும்பினார்.வரும் நாட்களில், வாரம் ஒரு மாவட்டம் வீதம், சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.,வை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

அடுத்த சட்டசபை தேர்தலில், கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவது, அவரது குறிக்கோளாகும்.சுற்றுப்பயணம் செல்வதற்காகவே, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய, 'டயோட்டா' காரை, வாங்கியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய அவரை, ஊழியர்கள் வரவேற்று இதே காரில் தான் அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X