பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் பணிகள் பாதிக்கும் என அச்சம்: 'கலங்க' வைத்த உத்தரவு!பரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:''ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பிறப்பித்த உத்தரவால், ஊராட்சிகளில் பணிகள் பாதிக்கப்படும்; இந்த உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும்,'' என, ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாதேவி, அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கு ஒரு உத்தரவு அனுப்பியுள்ளார். அதில், 'ஊராட்சி மன்ற அலுவலகங்களில், அரசால் நியமனம்

மேட்டுப்பாளையம்:''ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பிறப்பித்த உத்தரவால், ஊராட்சிகளில் பணிகள் பாதிக்கப்படும்; இந்த உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும்,'' என, ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாதேவி, அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கு ஒரு உத்தரவு அனுப்பியுள்ளார். அதில், 'ஊராட்சி மன்ற அலுவலகங்களில், அரசால் நியமனம் செய்யப்படாத பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களை சந்தித்த பின், ஊராட்சி மன்ற தலைவரை சந்திக்க கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், பொதுமக்கள் பெரிதும் பாதித்துள்ளதாகவும், அலுவலகத்துக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் பல புகார்கள் வந்துள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களில், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அரசால் நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலர், சுகாதார பணியாளர்கள் மற்றும் மேல்நிலை தொட்டி குடிநீர் இயக்குபவர்கள் தவிர, மற்ற நபர்கள் யாரும் ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருக்கக் கூடாது. மீறி பணியாற்றுவது தெரியவரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதி மீது, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ன் படி உரிய மேல் நடவடிக்கை தொடரப்படும்' என, அதில் கூறியுள்ளார்.ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உத்தரவு குறித்து, காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மக்கள் தொகை, 5,000த்துக்கும் குறைவாக உள்ள பகுதிகள் ஊராட்சியாக உள்ளது. ஆனால், கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குறைந்தபட்சம், 4,000ம், அதிகபட்சம், 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பெரிய ஊராட்சிகளில் பேரூராட்சிக்கு இணையாக மக்கள் தொகை உள்ளனர். ஒவ்வொரு ஊராட்சியிலும், 12- வார்டுகளுக்கு குறையாமல் உள்ளன. அரசு விதிப்படி இந்த ஊராட்சிகளில், அரசால் நியமனம் செய்த இரண்டு துாய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்து பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள, ஊராட்சி குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்ய இயலாது. அதற்காக, ஊராட்சி நிர்வாகம் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.மேலும், ஊராட்சி செயலாளர்கள், வரி வசூல், குடிநீர் கட்டணம் வசூல், ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு, குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்தல் உட்பட பணிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டம், தணிக்கைக்கும் செயலாளர்கள் செல்கின்றனர். அலுவலகத்தில் செயலாளர் மட்டுமே பணியாற்றினால், ஒவ்வொரு ஆய்வு மற்றும் கூட்டங்களுக்கு செல்லும் பொழுது, அலுவலகத்தை பூட்டிச் செல்ல வேண்டும். இதனால் அலுவலகத்திற்கு வரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டி இருக்கும். ஊராட்சி பணிகள் தடையில்லாமல் நடைபெற, ஒருவர் மற்றும் இருவரை, ஊராட்சித் தலைவர்கள் நியமித்துள்ளனர். அவர்களுக்கு தமது சொந்த செலவில் சம்பளம் வழங்கப்படுகிறது. அலுவலகப் பணிகள் காரணமாக செயலாளர்கள் வெளியே சென்றாலும், ஊராட்சியின் பணிகள் எவ்வித தடையில்லாமல் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும், அனைத்து அரசு அலுவலங்களிலும், ஆள் பற்றாக்குறை காரணமாக, அதிகாரிகள் தமது சொந்த பொறுப்பில், பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர். இது, அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்.இந்நிலையில், தற்போது உதவி இயக்குனர் அறிவித்துள்ள உத்தரவால், ஊராட்சிகளில் பணிகள் பாதிக்கும். பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு, உள்ளாட்சித்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர், இந்த உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ellar - New Delhi,இந்தியா
25-ஆக-202108:41:32 IST Report Abuse
ellar ஊராட்சி தலைவர்களே 1) செயலரே இல்லாமல் ஆபீஸ் கதவை திறந்து வைக்கும் மற்ற நபர் எந்த "மக்களின் ஏமாற்றத்தை" போக்குவார்? 2) செயலர் ஆய்வுக்கு போகிற நேரம் தவிர சிரத்தையுடன் "மக்கள் பணி" மட்டுமே ஆற்றுகிறாரா? 3) ஊராட்சி பேரூராட்சி ஆக நீங்கள் ஏன் கேட்க மாட்டீர்கள்? அப்படி செய்தால் தேவையான அளவு பணியாளர்கள் கிடைப்பார்கள் தானே? 4) ஊராட்சி நிர்வாத்திற்கு அரசிடம் இணைந்து போராடி பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்க எப்போது கேட்டீர்கள்? அது என்ன ஆகியது? 5) கையில் இருந்து "சொந்தகாசில்"சம்பளம் நீங்கள் கொடுத்தால்.....அதை..... விட்டு விடுவோம்... உங்கள் குடும்பம் அனுமதிக்கிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X