பெங்களூரு : பெங்களூரின் பீன்யா தொழிற்பேட்டை பகுதியில் அடிப்படை வசதிகளை விரைவில் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது.பெங்களூரு பீன்யா தொழிற்பேட்டை பகுதி, 1970ல் கர்நாடக சிறுதொழில்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பணியாளர்கள் இப்பகுதியிலுள்ள, தொழில் நிறுவனங்களில் பணி செய்கின்றனர்.தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பினும், பணியாளர்கள் சென்று வருவதற்கு போக்குவரத்து உட்பட பல அடிப்படை வசதிகள் குறைபாடாக இருப்பதால், பாதுகாப்பில்லாத பகுதியாகவே மாறிவிட்டது.தொழிற்பேட்டை பகுதியில் குப்பைக்கழிவுகள்; ரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பது பற்றியும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்பின், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.எரியாமல் இருக்கும் தெருவிளக்குகளை சரிசெய்வது; ரோடுகளை மேம்படுத்துவது; கழிவுகளை அப்புறப்படுத்துவது என துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.குழு ஒன்று அமைக்கப்பட்டு, பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE