சோழவரம் : பைக் ரேசில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவிக்க, மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது.
மீஞ்சூர் - -வண்டலுார் வெளிவட்ட சாலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து, உயிர்பலி உள்ளிட்டவை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்த புகாரை அடுத்து, சோழவரம் போலீசார் கடந்த 15ம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டு எட்டு பேரை பிடித்தனர்; பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கடந்த, 22ம் தேதி, போலீசார் அப்பகுதியில் மீண்டும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, பைக் ரேசில் ஈடுபட்டிருந்த, இருவரை பிடித்து வழக்கு பதிந்தனர். அவர்களது பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள் குறித்து, 63799 04848 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி, காவல் துறை கேட்டு கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE