தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.77 கோடி மதிப்பு திட்டம் என்னாச்சு! பாதாள சாக்கடை இல்லாததால் ஏரிகள் நாசம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளன. இங்கு லட்சத்திற்கும் மேலான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை அமைந்துள்ளன. மேலும், ஸ்ரீபெரும்புதுார் அருகே ஐந்து 'சிப்காட்' தொழிற்பூங்காவில் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இந்த தொழிற்சாலையில், பல மாநிலங்களில்
 ஸ்ரீபெரும்புதூரில் ரூ.77 கோடி மதிப்பு திட்டம் என்னாச்சு! பாதாள சாக்கடை இல்லாததால் ஏரிகள் நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளன. இங்கு லட்சத்திற்கும் மேலான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை அமைந்துள்ளன.

மேலும், ஸ்ரீபெரும்புதுார் அருகே ஐந்து 'சிப்காட்' தொழிற்பூங்காவில் 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இந்த தொழிற்சாலையில், பல மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர், ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டத்தில் தங்கியுள்ளனர். மேற்கண்ட இடங்களில் சேகரமாகும் கழிவு நீர், தனியார் டேங்கர் லாரிகளில் எடுக்கப்படுகிறது.

இந்த கழிவு நீரை டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என விதிமுறை உள்ளது.ஆனால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டத்தில் கழிவு நீரை எடுக்கும் எந்த டேங்கர் லாரிகளும் இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை.மாறாக, டேங்கர் லாரிகளில் எடுக்கப்படும் கழிவு நீரை, இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், கீவளூர், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்புற பகுதியிலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாய், சவுத்திரி கால்வாயிலும் கொட்டுகின்றனர்.

பல ஆண்டுகளாக இதுபோலவே அட்டூழியம் செய்கின்றனர். தவிர, தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீரும் கொட்டப்படுகிறது.இதனால், செம்பரம்பாரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் மாசடைந்து வருகிறது. கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, ஸ்ரீபெரும்புதுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் எத்தனை டேங்கர் லாரிகள் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது, நாளொன்றுக்கு எத்தனை லிட்டர் கழிவு நீர் எடுக்கப்படுகிறது போன்ற எந்த கணக்கு வழக்கும் அரசு தரப்பில் கண்காணிப்பது இல்லை.இதனால், கழிவு நீர் லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இவற்றை முறையாக கணக்கெடுத்து கண்காணிக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமாக கழிவு நீர் லாரிகள் இல்லை.கழிவு நீர் அகற்றும் பணியில் தனியார் டேங்கர் லாரிகளே பயன்படுத்தப்படுகிறது. தனியார் கழிவு நீர் லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைந்து, அவர்களுக்கு அரசு சார்பில் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை. இதனால் அவர்கள், சுற்றுச்சூழல் மாசு பற்றி அறியாமல் நீர் நிலைகளில் கழிவு நீரை கொட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் செலவாகிறது

ஸ்ரீபெரும்புதுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் நாங்கள் காஞ்சிபுரம், திருமழிசை ஆகிய இடங்களில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வர எங்களுக்கு கூடுதல் செலவு ஆகும். இதனால், ஆட்கள் இல்லாத இடங்களில் கழிவு நீரை கொட்டுகிறோம். ஸ்ரீபெரும்புதுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்தால் அங்கு எளிதாக செல்ல முடியும்.-கழிவு நீர் லாரி உரிமையாளர் ஒருவர், ஸ்ரீபெரும்புதுார்

மிரட்டப்படும் பொதுமக்கள்

ஸ்ரீபெரும்புதுாரில் கழிவு நீர் அகற்றும் தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் அரசியல்வாதிகள், ரவுடிகள் மட்டுமே டேங்கர் லாரி மூலம் கழிவு நீரை அகற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் நீர் நிலையில் கழிவு நீரை கொட்டி அட்டுழியம் செய்கின்றனர். இவற்றை தட்டி கேட்கும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, பேரூராட்சி துறை, வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர். கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் மாதந்தோறும் காவல் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு மாமுல் கொடுப்பதால், பொது இடத்தில் கழிவு நீர் கொட்டும் டேங்கர் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை.என்.சீனிவாசன், ஸ்ரீபெரும்புதுார்

புதிய ஒப்பந்தம் விடப்படும்

பாதாள சாக்கடை திட்ட பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன. பணிகள் திட்டமிட்டபடி முடிக்காததால் 2018ம் ஆண்டு ஒப்பந்ததாரரின் பணி ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பணிகள் மேற்கொள்ள மறு டெண்டர் விட்டுள்ளோம். புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கிய பின், ஓராண்டிற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர், சென்னை.ஸ்ரீபெரும்புதுார், ஆக. 25--ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 77 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வீடுகளில் இருந்து கழிவு நீர் எடுக்கும் டேங்கர் லாரி ஓட்டுனர்கள், செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவு நீரை விடுவதால், அப்பகுதி நாராசமாகிறது. இந்த அத்துமீறலை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.8 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு நகர்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 77 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், 2013ம் ஆண்டு துவங்கப்பட்டன.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தினர் செய்து வரும் இந்த பணிகள் 2016ம் ஆண்டு முடிக்க நிபந்தனை வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை திட்ட பணிகள் முடிவடையவில்லை. இதனால், பேரூராட்சியின் பல இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. கழிப்பறையில் இருந்து, டேங்கர் லாரியில் அகற்றப்படும் மனித கழிவுகள், நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X