பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்கிழமை என்பதால், மூலவருக்கு, காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜையும் நடந்தது.அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில்

பாலாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்கிழமை என்பதால், மூலவருக்கு, காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜையும் நடந்தது.அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காலை முதல், மாலை வரை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

27ல் கும்பாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி, பழைய பஜார் தெருவில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. ஆகையால், வரும், 27 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து கோவில் நிர்வாகிகள் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது கோவில் அருகே, ஐந்து யாகசாலைகள் கட்டும்பணி, நடந்து வருகிறது. வரும், 27ம் தேதி, காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ஆய்வு

திருத்தணி: திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று வழங்குவதற்கு முன் கட்டமைப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.அந்த தொகையில் மருத்துவமனையில் கட்டமைப்பு பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட குடும்ப நல இணை இயக்குனர் மருத்துவர் இளங்கோவன், சென்னை அரசு மருத்துவர் அசோக் ஆகியோர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.அப்போது முன்கட்டமைப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளதா என, அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X