பொது செய்தி

இந்தியா

கொரோனா மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவில் 4,000 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக, மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் சிகிச்சை பெறுவோர் மற்றும் மருத்துவமனைகளிலும், கொரோனா பாதிப்பின் போது உள்ள மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, அப்புறப்படுத்துமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சேகரிக்கப்பட்ட

பெங்களூரு : கர்நாடகாவில் 4,000 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக, மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் சிகிச்சை பெறுவோர் மற்றும் மருத்துவமனைகளிலும், கொரோனா பாதிப்பின் போது உள்ள மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, அப்புறப்படுத்துமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சேகரிக்கப்பட்ட கழிவுகளின் விபரம் குறித்து அறிக்கை சமர்பிக்கவும், தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

கர்நாடகாவில் மாநில அரசின் சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது:மாநில அரசின் தகவல் பதிவு படி, கடந்தாண்டு ஜன., முதல் நடப்பாண்டு ஜூன் வரை 4,113 டன் கொரோனா மருத்துவகழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.அதில், நடப்பாண்டு மே மாதம் 587 டன் சேகரிக்கப்பட்டது. இது மற்ற மாதங்களை விட அதிகரித்துள்ளது.மாநிலத்தில் மொத்தமாக, 36,021 மருத்துவமனைகள், மையங்கள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 77 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. இந்த கழிவுகள், மாநிலத்தில் உள்ள 27 இடங்களில் சேர்க்கப்படுகின்றன.மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமாகவும் அப்புறப்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பசுமை தீர்ப்பாயம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X