பொது செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கம் 'பங்க்'கில் சிக்கலுக்கு தீர்வு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : கல்பாக்கம் பெட்ரோல் பங்க்கில், முதல் 'ஷிப்ட்'டில் வாங்கிய 'பில்'லுக்கான பெட்ரோல், இரண்டாவது ஷிப்ட்டில் வழங்கப்படாது என, நிர்வாகம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் நகரிய பகுதியில், அணுசக்தி ஊழியர்கள் கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலை நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க் இயங்குகிறது. இதன் வேலை நேரம், காலை, 6:00 - பிற்பகல், 2:00 மணி; பிற்பகல், 2:00 - இரவு, 8:30

மாமல்லபுரம் : கல்பாக்கம் பெட்ரோல் பங்க்கில், முதல் 'ஷிப்ட்'டில் வாங்கிய 'பில்'லுக்கான பெட்ரோல், இரண்டாவது ஷிப்ட்டில் வழங்கப்படாது என, நிர்வாகம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் நகரிய பகுதியில், அணுசக்தி ஊழியர்கள் கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலை நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க் இயங்குகிறது. இதன் வேலை நேரம், காலை, 6:00 - பிற்பகல், 2:00 மணி; பிற்பகல், 2:00 - இரவு, 8:30 மணி வரை என, இரண்டு ஷிப்ட்டுகளில் இயக்கப்படுகிறது.பண்டக உறுப்பினர் மற்றும் வாடிக்கையாளர்கள், வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப, இந்த பங்க்குக்கு வந்து பில் பெறுகின்றனர்.

முதல் ஷிப்ட்டுக்கு வாங்கும் இந்த பில்லை, கூட்டம் காரணமாக பெட்ரோல் நிரப்பாமல், இரண்டாவது ஷிப்ட்டில் வந்து நிரப்புகின்றனர். ஒவ்வொரு ஷிப்ட்டிலும், வெவ்வேறு ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், இம்முறையால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டது.எனவே, முதல் ஷிப்ட் வேலை நேரத்தில் பெற்ற பில்லிற்கு, அதே வேலை நேர ஷிப்ட்டில் மட்டுமே, எரிபொருள் வழங்கப்படும்; முதல் பில்லுக்கு இரண்டாவது நேர ஷிப்ட்டில் வழங்க இயலாது என்றும், நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X