போலீஸ் டைரி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
விபத்தில் பெண் உயிரிழப்புஈக்காடு: திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சலீம், மனைவி சமிமாள், 45. இவர், திருவள்ளூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 8ம் தேதி, ஆட்டோவில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் பின்புறம், ஆட்டோ மோதி விபத்திற்குள்ளானது.இதில் பலத்த காயமடைந்த சமிமாள்,

விபத்தில் பெண் உயிரிழப்பு

ஈக்காடு: திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சலீம், மனைவி சமிமாள், 45. இவர், திருவள்ளூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 8ம் தேதி, ஆட்டோவில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் பின்புறம், ஆட்டோ மோதி விபத்திற்குள்ளானது.இதில் பலத்த காயமடைந்த சமிமாள், முதலுதவி சிகிச்சைக்கு பின், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண்கள் மாயம்

மப்பேடு: மப்பேடு அடுத்த, இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் வைஷாலி, 20. தனியார் கல்லுாரியில் படித்து விட்டு வீட்டில் இருந்தார் வைஷாலி.இவரது தாய், வீட்டின் பின்புறம் செனறுவிட்டு வந்து பார்த்த போது வைஷாலியை காணவில்லை. இது குறித்து, கிருஷ்ணன் அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகள் மோனிகா, 19. இப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதி காலை வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், முனுசாமி அளித்த புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற தாய், மகன் கைது

திருத்தணி: திருத்தணி பழைய சென்னை சாலை பகுதியில், தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், ஆந்திர மாநிலம், ஓஜிகுப்பம் பகுதியில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார், நேற்று, பழைய சென்னை சாலையில் முட்புதரில், ஒரு பெண் உட்பட இருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தனர்.போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், திருத்தணி, நேரு நகரைச் சேர்ந்த சாந்தி, 40; அவரது மகன் லோகேஷ், 22, என, தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 15 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர்.

உண்டியல் திருடிய இருவருக்கு 'காப்பு'

நகரி: சித்துார் மாவட்டம், வரதய்யபாளையம், காம்பாக்கம் கிராமத்தில் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து, கோவிலில் இருந்த உண்டியலை திருடிச் சென்றனர்.இது குறித்து கிராமத்தினர் அளித்த புகாரையடுத்து, வரதய்யபாளையம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த வாசு, 40, கிரிஷ், 35 ஆகிய இருவரும் கோவில் உண்டியல் திருடியதை ஒப்புக் கொண்டனர். உண்டியல் மற்றும், 20 ஆயிரம் ரூபாயை போலீசார் மேற்கண்ட இருவரிடம் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டி கொலை

நகரி: சித்துார் மாவட்டம், ராமகுப்பம் அடுத்த, நல்லரால்லு செனு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா, 65. இவரது வீட்டிற்கு தமிழகம், வாணியம்பாடி அடுத்த, இளைய நகரைச் சேர்ந்த பேரன் தர்ஷன், 30, என்பவர் அடிக்கடி வந்து செல்வர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்ஷன், நண்பர்கள் நால்வருடன், பாட்டி மல்லிகா வீட்டிற்கு வந்தார். பின், பாட்டியிடம் மது குடிப்பதற்கு பணம் கொடுக்குமாறு தர்ஷன் வற்புறுத்தினார்.பணம் கொடுக்க மல்லிகா மறுத்ததால் ஆத்திரமடைந்து, பீங்கான் பாத்திரத்தால், மல்லிகாவின் தலை மீது அடித்து கொலை செய்தார். இது குறித்து, ராமகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து, தர்ஷனை தேடி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

நகரி: சித்துார் மாவட்டம், வி.கோட்டா அடுத்த, சின்னசியமா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா,41. விவசாயி. இவர், நேற்று முன்தினம், மகன் வம்சி, 9, என்பவருடன், வயல்வெளிக்கு சென்று தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.அப்போது, அங்குள்ள மின் மாற்றியின் கம்பியை வம்சி தொட்ட போது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்ததும், சங்கரப்பா மகனை காப்பாற்ற சென்றார். இதில், வம்சி லேசான காயத்தில் உயிர் தப்பினார். சங்கரப்பா உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். வி.கோட்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபருக்கு 'போக்சோ'

நகரி: சித்துார் மாவட்டம், எஸ்.ஆர்.புரம் அடுத்த, மங்குண்டா பகுதியைச் சேர்ந்தவர் சூர்யகுமார், 21. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார்.மேலும், தன்னை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என, மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, எஸ்.ஆர்.புரம் போலீசார், சூர்யகுமாரை, 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X