பொது செய்தி

இந்தியா

பெங்களூரு - மைசூரு பத்து வழிச்சாலை திட்டம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மைசூரு : ''எம்.எல்.சி., விஸ்வநாத் ஹரிச்சந்திரன் மாதிரி பேசக்கூடாது. இவர் பதவியில் இருந்த போது, பெங்களூரு -- மைசூரு இடையே பத்து வழி சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றால், அப்போதே ஏன் திட்டத்தை செயல்படுத்தவில்லை,'' என பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.'வீடியோ'பெங்களூரு -- மைசூரு இடையே பத்து வழி சாலை போடப்பட்டு வருகிறது. சாலை பற்றிய வீடியோவை, சமூக

மைசூரு : ''எம்.எல்.சி., விஸ்வநாத் ஹரிச்சந்திரன் மாதிரி பேசக்கூடாது. இவர் பதவியில் இருந்த போது, பெங்களூரு -- மைசூரு இடையே பத்து வழி சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றால், அப்போதே ஏன் திட்டத்தை செயல்படுத்தவில்லை,'' என பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

'வீடியோ'
பெங்களூரு -- மைசூரு இடையே பத்து வழி சாலை போடப்பட்டு வருகிறது. சாலை பற்றிய வீடியோவை, சமூக வலைதளங்களில் பா.ஜ., -- எம்.பி., பிரதாப் சிம்ஹா வெளியிட்டு, இத்திட்டத்துக்காக தன் பங்களிப்பை விவரித்திருந்தார்.இதற்கு அதிருப்தி தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத், 'இந்த திட்டம் நான், எம்.பி.,யாக இருந்த போது வகுக்கப்பட்டது. திட்டம் குறித்து கூட்டம் நடந்த போது, நான், அன்றைய எம்.பி.,க்கள் துருவ நாராயண், ரம்யா பங்கேற்றிருந்தோம். 'இத்திட்டத்தில் பிரதாப் சிம்ஹாவின் பங்களிப்பு எதுவும் இல்லை. அனைத்தையும், தானே கொண்டு வந்ததாக கூறினால் எப்படி' என, கேள்வி எழுப்பியிருந்தார்.

இவருக்கு பதிலடி கொடுத்து, பிரதாப் சிம்ஹா நேற்று கூறியதாவது:மைசூரு -- பெங்களூரு இடையே பத்து வழி சாலை பணிகளின் வீடியோவை வெளியிட்டதால், எத்தனை பேருக்கு வயிறு எரிந்ததோ தெரியவில்லை.நரேந்திர மோடி அரசு, திட்டத்துக்கு நிதி வழங்கி பணிகள் துவங்கப்பட்டது. 8,666 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, விஸ்வநாத் எட்டு பைசாவாவது வழங்கும்படி செய்தாரா. சித்தராமையா வழங்கினாரா?மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி காலத்தில், துவங்கப்பட்ட திட்டத்துக்கு நிதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை விஸ்வநாத் கொண்டு வந்தார் என்றால், தேர்தலின் போது பிரசாரத்தில் கூறாதது ஏன்? விஸ்வநாத் விமர்சிக்காத நபர்களே இல்லை.

டிரம்ப், பைடனையும் அவர் விட்டு வைக்கவில்லை.தேவகவுடா, எடியூரப்பா, விஜயேந்திரா, சோமசேகர் என அனைவரையும் திட்டி முடித்துவிட்டார். முதல்வர் பசவராஜ் பொம்மையை பற்றி விமர்சிக்க துவங்கவில்லை. கிடைத்த இடைவெளியில் என்னை விமர்சிக்கிறார்.ஹரிச்சந்திரன் ஊடகத்தின் முன்னிலையில் விவாதிக்க அவர் வர வேண்டும். திட்டத்தை பற்றி விவாதிக்கட்டும். ஹளே உன்டுவாடி குடிநீர் திட்டத்துக்கு ஐந்து பைசா நிதி பெற்றுத்தரவில்லை. இப்போது ஹரிச்சந்திரன் போன்று பேசுகிறார்.இவர் மூத்தவர். இளையவர்களுக்கு வழி காண்பிக்க வேண்டும். தெருச்சண்டையில் இறங்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X