பொது செய்தி

தமிழ்நாடு

27ல் விவசாயிகள் கூட்டம்; பாசன திட்டத்திற்கும் பதிவு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், நாளை மறுதினம் காலை, 11.00 மணிக்கு நடக்க உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், நாளை மறுதினம் காலை, 11.00 மணிக்கு நடக்க உள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் பங்கேற்று வேளாண் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.மேலும், கூட்டம் நடக்கும் அதேநாளில், பாரத பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில், விவசாயிகள் இணைய வழியாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார், சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று, இணைய வழி சிறு, குறு விவசாய சான்றுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.கூட்டத்திற்கு வருவோர், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X