காங்கேயம் தொழிலதிபர் மகனை கடத்தி ரூ.3 கோடி பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்கேயம் தொழிலதிபர் மகனை கடத்தி ரூ.3 கோடி பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

Added : ஆக 24, 2021
Share
காங்கேயம்:காங்கேயம் பகுதியில் ஆட்கடத்தல் வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் இருவர் கைது செய்துள்ளனர். காங்கேயம் அருகே அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக காங்கேயத்தில் பிரமாண்டமான திருமண மண்டபமும் உள்ளது. இவரது மகன் சிவபிரதீப்,22, அரிசி ஆலை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.இவரை கடந்த கடந்த 22ம்

காங்கேயம்:காங்கேயம் பகுதியில் ஆட்கடத்தல் வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் இருவர் கைது செய்துள்ளனர். காங்கேயம் அருகே அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக காங்கேயத்தில் பிரமாண்டமான திருமண மண்டபமும் உள்ளது. இவரது மகன் சிவபிரதீப்,22, அரிசி ஆலை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

இவரை கடந்த கடந்த 22ம் தேதி பாப்பினி-வீரசோழபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஏழு நபர்கள் கொண்ட குழுவினரால் சிவபிரதீப் கடத்தப்பட்டார். அன்று இரவே கடத்தல் காரன் நிபந்தனையை ஏற்று அன்பு மகனை மீட்க 3 கோடி கொடுத்து கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டனர். இது குறித்து காங்கேயம் போலீசாரிடம் புகார் செய்தார். எட்டு தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இதில் மதுரை புறநகர் பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த திண்டிவனம்,குலமங்கலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரின் மகன் சக்திவேல்(37), மதுரையை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவரின் மகன் அகஸ்டின்(45), ஆந்திரா மாநிலம், நெல்லூர், எ.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த எஸ்திராஜ் என்பாரின் மகன் பாலாஜி(38) ஆகிய மூன்று பேரையும் நேற்று முன்தினம் மதியம் கைது செய்தனர்.

பின்பு அன்று இரவே கிருஷ்ணகிரி போலீசாரல், கிருஷ்ணகிரியை சேர்ந்த பஷீர்,32, அகமதுல்லா,48, ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடமிருந்து ரூ.3 கோடியில் 1 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரம் ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பழனிக்கு சென்ற தனிப்படை போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பழனி, கீரனூர் பகுதியில் பதுங்கி இருந்த ஜாபர்சாதிக்,37, சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து காங்கேயம் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏழு பேர் கொண்ட கடத்தல் கும்பலில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தல்காரர்கள் பணயப் பணமாக கொண்டு சென்ற ரூ.3 கோடியில் இதுவரையில், ரூ. 2,49,99500 மீட்கப்பட்டுள்ளது. இதில், பாலாஜி, சக்திவேல் ஆகிய இருவரும் ஈஸ்வரமூர்த்தின் அரிசி ஆலையில், இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு வரை ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X