அரசியல் செய்தி

தமிழ்நாடு

டூ - வீலர் மானியம்: பா.ஜ., கோரிக்கை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை:''பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க, மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.சட்டசபைக்கு வெளியே அவர் அளித்த பேட்டி:இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை, மாநில அரசு நிறுத்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, உழைக்கும் மகளிருக்கு மிகப்பெரிய

சென்னை:''பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க, மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சட்டசபைக்கு வெளியே அவர் அளித்த பேட்டி:இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை, மாநில அரசு நிறுத்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, உழைக்கும் மகளிருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் முன்னேற்றம் என்பது, அவர்கள் சுயமாக முடிவெடுப்பது; யாரையும் சார்ந்திராமல், அவர்கள் பணியை அவர்களே செய்வது. இதற்கு அடிப்படையாக இருப்பது, அவர்கள் யாருடைய தயவும் இல்லாமல், தங்கள் பணியை மேற்கொள்ள, தாங்கள் சொந்தமாக வாகனங்களை இயக்குவது.பெண்கள் வாகனங்கள் வாங்க வழங்கப்படும் மானியத்தை நிறுத்துவது, வாகனத்திற்கான மானிய நிறுத்தம் அல்ல.

பெண்களுக்கான இருசக்கர வாகனம், அவர்களுக்கு இறக்கைகளாக மாறி உள்ளது. எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர வேண்டும்.இவ்வாறு வானதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X