பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ - மாணவியருக்கு இலவச சிறப்பு பயிற்சி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு குறுகிய கால, ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான, திறன்

காஞ்சிபுரம் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு குறுகிய கால, ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான, திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொள்ள, தாட்கோவின் http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு போக்குவரத்து படியும் வழங்கப்படும்.இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.சி.வி.டி., - எஸ்.எஸ்.சி., சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படும்.சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள், சுயதொழில் துவங்க, http://application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து, தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் பயன் பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கவும் ஆவன செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X