பொது செய்தி

தமிழ்நாடு

சிறு பால பணி தீவிரம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காரியமங்கலத்தில், சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பழைய சிறுபாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சி, திருவள்ளுவர் தெருவில் மழை நீர் வெளியேறும் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த சிறு பாலத்தின் ஒரு பகுதி, இடிந்து சேதமடைந்த நிலையில்

உத்திரமேரூர் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காரியமங்கலத்தில், சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பழைய சிறுபாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சி, திருவள்ளுவர் தெருவில் மழை நீர் வெளியேறும் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த சிறு பாலத்தின் ஒரு பகுதி, இடிந்து சேதமடைந்த நிலையில் இருந்தது.இவ்வழியாக செல்லும் வாகனங்கள், சிறுபாலத்தின் வளைவில் திரும்பும்போது, கால்வாயின் இடிந்த பகுதி பள்ளத்தில் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேதமடைந்த பழைய சிறுபாலத்தை அகற்றி, புதிதாக சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X