பொது செய்தி

இந்தியா

கொரோனா இறப்பு குறைவு; டாக்டர்கள் நம்பிக்கை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பெங்களூரு : பல மாதங்களுக்கு பின், பெங்களூரில் கொரோனா இறப்பு எண்ணிக்கை இல்லாதது, மருத்துவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா முதல் அலையின் இறுதியில், மார்ச் 14ல் கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இறப்பு எண்ணிக்கை இல்லை. ஆனால், பெங்களூரில் ஐந்துக்கும் குறைவான எண்ணிக்கை பதிவானது.இந்நிலையில், தற்போது இரண்டாம் அலை பாதிப்பு பல மாவட்டங்களில்

பெங்களூரு : பல மாதங்களுக்கு பின், பெங்களூரில் கொரோனா இறப்பு எண்ணிக்கை இல்லாதது, மருத்துவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முதல் அலையின் இறுதியில், மார்ச் 14ல் கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இறப்பு எண்ணிக்கை இல்லை. ஆனால், பெங்களூரில் ஐந்துக்கும் குறைவான எண்ணிக்கை பதிவானது.இந்நிலையில், தற்போது இரண்டாம் அலை பாதிப்பு பல மாவட்டங்களில் குறைந்து வரும் நிலையில் பெங்களூரில் நேற்று முன்தினம் முதன் முறையாக இறப்பு எண்ணிக்கை இல்லாதது, சுகாதாரத்துறை மகிழ்ச்சி அடைந்துள்ளது.பெங்களூரு உட்பட 23 மாவட்டங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை இல்லை.

தட்சிணகன்னடா மாவட்டத்தில் மூன்று; ஹாசன் மாவட்டத்தில் இரண்டும் பதிவாகியுள்ளது.இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், உடனடியாக பாதிப்பு குறைந்து வருவதாக முடிவுக்கு வர முடியாதென மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்பதன் மூலம் தான் கொரோனா பாதிப்பின் உண்மை நிலை அறிய முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா கூறியதாவது:பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறைகிறது.

கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு 300க்கும் கீழ் குறைந்துள்ளது. தடுப்பூசி அதிகரிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம்.தடுப்பு விதிமுறைகளை அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து பின்பற்றினால் பாதிப்பை முழுமையாக குறைக்கலாம். கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளும் 170திலிருந்து 120ஆக குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க 54 மார்ஷல் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X