பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தி கொள்ள 'டோக்கன்' தேவை இல்லை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 'டோக்கன்' இல்லாமல் தடுப்பூசி போடப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வந்தனர்.கூட்டம் அதிகரித்ததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 'டோக்கன்' இல்லாமல் தடுப்பூசி போடப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வந்தனர்.கூட்டம் அதிகரித்ததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை தவிர்க்க டோக்கன் முறை கொண்டு வரப்பட்டது. முதல் நாள் டோக்கன் பெற்றவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான நாள், குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது.

மேலும், அவர்களின் பெயர் பட்டியல் மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளதால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவு அருகே செலுத்தப்பட்டு வருகிறது.நேற்று முதல், பொதுமக்கள் டோக்கன் பெறாமல் நேரடியாக அங்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இது குறித்து, மருத்துவமனை நுழைவாயில் கேட்டில், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X