4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

Added : ஆக 24, 2021
Share
சென்னை:நான்கு மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்யும். சென்னையில், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு

சென்னை:நான்கு மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்யும். சென்னையில், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், வரும், 27, 28ம் தேதிகளில் கன மழை பெய்யும்.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X