பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் மகசூலுக்கு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சின்ன சன்னா ரக நெல் குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், சின்ன சன்னா ரகமும் ஒன்று. ஆடி முதல், ஐப்பசி மாதம் வரை, எப்போது வேண்டுமானாலும் விதைக்க ஏற்ற ரகம்.இது, 130 நாள் விளையக்கூடியது. நேரடி விதைப்பு மூலமாக விதைப்பு செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் போதுமானது. விதைப்பதற்கு, இரு

சின்ன சன்னா ரக நெல் குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், சின்ன சன்னா ரகமும் ஒன்று. ஆடி முதல், ஐப்பசி மாதம் வரை, எப்போது வேண்டுமானாலும் விதைக்க ஏற்ற ரகம்.இது, 130 நாள் விளையக்கூடியது. நேரடி விதைப்பு மூலமாக விதைப்பு செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் போதுமானது.

விதைப்பதற்கு, இரு தினங்களுக்கு முன், நீரில் ஊற வைத்து, நன்கு உழவு செய்திருக்கும் நிலத்தில், நேரடி விதைப்பு செய்ய வேண்டும்.இயற்கை உரம் மற்றும் நீர் பாசனத்தை சிக்கனமாக கடைப்பிடித்தால், வழக்கமான மகசூலைவிட கூடுதலாக எடுக்கலாம்.குறிப்பாக, இயற்கை விவசாயத்தில், ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக, 20 மூட்டை நெல்லை அறுவடை செய்யலாம்.

இந்த சின்ன சன்னா ரகத்தில், 35 மூட்டை வரை அறுவடை செய்யலாம். அரிசியாக மாற்றி விற்பனை செய்தாலும், விதை நெல்லாக பதப்படுத்தி விற்பனை செய்தாலும், கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X