பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை ஆக்கிரமித்து வைத்த குழாய்கள் அகற்றம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் சாலை பகுதியை ஆக்கிரமித்து, தனியார் நிறுவனம் அமைத்த வடிகால்வாய் குழாய்கள் அகற்றப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் - பூஞ்சேரி பகிங்ஹாம் கால்வாய் அருகில், தனியார் அடுக்குமாடி வசிப்பிட வளாகம் உள்ளது. இவ்வளாக நிறுவனம், வளாக மழை நீரை வெளியேற்ற, அதன் முன்புற சுற்றுச்சுவரை ஒட்டி, சாலை பகுதியை ஆக்கிரமித்து, குறிப்பிட்ட நீள வடிகால்வாய்

மாமல்லபுரம் : மாமல்லபுரம் சாலை பகுதியை ஆக்கிரமித்து, தனியார் நிறுவனம் அமைத்த வடிகால்வாய் குழாய்கள் அகற்றப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் - பூஞ்சேரி பகிங்ஹாம் கால்வாய் அருகில், தனியார் அடுக்குமாடி வசிப்பிட வளாகம் உள்ளது. இவ்வளாக நிறுவனம், வளாக மழை நீரை வெளியேற்ற, அதன் முன்புற சுற்றுச்சுவரை ஒட்டி, சாலை பகுதியை ஆக்கிரமித்து, குறிப்பிட்ட நீள வடிகால்வாய் குழாய்கள் அமைத்தது. இதில், குடியிருப்பு கழிவு நீரையும் விட ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், சாலை பகுதியை ஆய்வு செய்து, வடிகால்வாய்க்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தார். கால்வாய் குழாய்களை தனியார் நிறுவனமே அகற்ற உத்தரவிட்டு, தவறினால் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார். இதைடுத்து தனியார் நிறுவனத்தினர், வடிகால்வாய் குழாய்களை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X