பொது செய்தி

தமிழ்நாடு

குளத்து நீரில் நச்சுத்தன்மை சுகாதார துறையினர் ஆய்வு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேருர் அடுத்த கட்டியாம்பந்தல் ஊராட்சி பொது குளத்து நீரில், நச்சுத்தன்மை உள்ளதாக கிராமவாசிகளின் புகாரை தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், குளத்து நீரின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம் கட்டியாம்பந்தல் ஊராட்சியில் பொதுகுளத்து நீரை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தண்ணீர் குடிக்க வைக்க, கிராமவாசிகள் பயன்படுத்தி

உத்திரமேரூர் : உத்திரமேருர் அடுத்த கட்டியாம்பந்தல் ஊராட்சி பொது குளத்து நீரில், நச்சுத்தன்மை உள்ளதாக கிராமவாசிகளின் புகாரை தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், குளத்து நீரின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம் கட்டியாம்பந்தல் ஊராட்சியில் பொதுகுளத்து நீரை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தண்ணீர் குடிக்க வைக்க, கிராமவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், குளத்து நீரில் நச்சுத்தன்மை உள்ளதாக கிராமவாசிகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்து இருந்தனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி, வருவாய் அதிகாரிகள் நேற்று, கட்டியாம்பந்தல் குளத்தை ஆய்வு செய்தனர். பின், குளத்து நீரின் மாதிரியை ஆய்வுக்காக கேனில் எடுத்துச் சென்றனர்.ஆய்வுக்கு பின்னரே நச்சுத்தன்மை குறித்து தெரியவரும் என, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X