பொது செய்தி

இந்தியா

முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்!

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:''பெருந்தொற்றாக இருந்த கொரோனா இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் தாக்கக் கூடிய, 'என்டமிக்' என்ற நிலையை எட்டியுள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.தனியார் இணைய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய, விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளதாவது:மிகப்

புதுடில்லி:''பெருந்தொற்றாக இருந்த கொரோனா இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் தாக்கக் கூடிய, 'என்டமிக்' என்ற நிலையை எட்டியுள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

தனியார் இணைய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய, விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளதாவது:மிகப் பெரிய பரப்பளவு, பெரும் மக்கள் தொகை, மாறுபட்ட வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவில் தற்போதுள்ள நிலையை ஆய்வு செய்யும்போது, நாம், 'என்டமிக்' எனப்படும் சில பிரிவினரை மட்டும் கொரோனா தாக்கும் நிலையை எட்டிஉள்ளோம்.

அதாவது வைரசுடன் வாழ மக்கள் பழகிவிட்டனர். நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு இருக்கும். இந்நிலையில் வைரஸ் மற்றவருக்கு பரவுவது மிக மிக குறைவாகவே இருக்கும்.

அதாவது தற்போதுள்ள நிலையைப் போல, ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆனால் பெரிய அளவில் பரவாது. அதிக அளவு மக்களுக்கு தடுப்பூசி போடுவது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக இந்த நிலை தொடருவதை உறுதி செய்யலாம். அடுத்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும். அப்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்.

மூன்றாவது அலை ஏற்படுமா, அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போதைக்கு எதையும் கூற முடியாது. குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. இருப்பினும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் எதிர்கால தேவைக்காக தற்போதே தேவையான வசதிகளை செய்வது சிறந்தது.'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக அடுத்த மாதத்தின் மத்தியில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X