பொது செய்தி

இந்தியா

12வது வார்டு இடைத்தேர்தல்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மாற்றம் வர போகுதா?அசம்பிளி தேர்தலோட முதல் டெஸ்ட்டு தான் 12வது வார்டு இடைத் தேர்தலாம். இங்கு நடக்கிற தேர்தல், 35 வார்டுகளிலும் மாற்றம் எதிரொலிக்கும்னு மாஜி முனிசி., தலைவர், தனது மனைவியை களத்தில் இறக்கி அதிரடியா பேசி, குலுங்க வெச்சிருக்காரு.இவரோட மனைவி வெற்றி, நகராட்சிக்கு மாற்றம் ஏற்படுத்துமாம். பல முனிசி., உறுப்பினர்கள் வருமானம் இல்லாமல் சுருங்கி போய் இருப்பதாக

மாற்றம் வர போகுதா?அசம்பிளி தேர்தலோட முதல் டெஸ்ட்டு தான் 12வது வார்டு இடைத் தேர்தலாம். இங்கு நடக்கிற தேர்தல், 35 வார்டுகளிலும் மாற்றம் எதிரொலிக்கும்னு மாஜி முனிசி., தலைவர், தனது மனைவியை களத்தில் இறக்கி அதிரடியா பேசி, குலுங்க வெச்சிருக்காரு.இவரோட மனைவி வெற்றி, நகராட்சிக்கு மாற்றம் ஏற்படுத்துமாம். பல முனிசி., உறுப்பினர்கள் வருமானம் இல்லாமல் சுருங்கி போய் இருப்பதாக பேசிக்கிறாங்க.

பன்னிரெண்டாவது வார்டில் மட்டும் ஜெயித்தால் போதும்; முனிசியில் இருக்கிற 18 உறுப்பினர்களின் வீட்டு கதவை தட்டும்; மாற்றத்துக்கு மணியடிக்கப்படுமென உரத்த பேச்சு, நகரில் பலரை விழிக்க வெச்சிருக்கு!தேவையை பூ நிறைவேற்றும்!பன்னிரெண்டாவது வார்டு இருப்பது மைனிங் பகுதியில். மைனிங் தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவமனை வசதி செய்து கொடுத்தது யாரு. 20 வருஷமா மூடி இருந்ததை தெறக்க வெச்சிருக்கோம்.தொழிலாளிகளோட நிலுவை தொகையை சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் என ரெண்டு அரசும் பூ சின்னத்துக்காரங்க கையில் தான் இருக்குது. அரசின் திட்டங்களை இந்த வார்டில, எங்களால் தான் நிறைவேற்ற முடியும்.அதனாலே, பூ அரசின் கட்சிக்கு பேராதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்குன்னு பூ கட்சியோடு சிட்டித் தலைவரு கூறினாரு.

இவரோட பிரச்சாரம் சுரங்க பகுதியில் திருப்பு முனை ஏற்படுத்தும்னு இவரின் இளைஞர் படை பம்பரமாக சுழலுறாங்க.ஓட்டு கேட்க வாராங்கண்ணே!மொத்த வார்டுகளின் பார்வையும், 12வது வார்டு மீது பாய்ந்துள்ளது. யாரும் யாருக்கும் சளைத்தவங்க இல்லை. 4 சுயேச்சைகளும், 2 தேசியக் கட்சிக்காரங்களும் ஓட்டு, ரேட்டு விளையாட்டில் கம்மியா, டம்மியாக யாரையும் மதிப்பிட முடியாது.காசு வாங்குறவங்க ஓட்டு போடாமல் டிமிக்கி கொடுத்தால், கட்டிப்போட்டு உருட்டுக்கட்டை காத்திருக்குன்னு ஜனங்க மத்தியில் பேச்சு நடமாடுது.

பழைய சம்பவங்கள் கதை பேசுது.ஓட்டுக்கு நோட்டு வாங்காமல் பார்த்துக் கொண்டால். உடலும் உள்ளமும் நலமாவே இருக்கும்னு ஊரறிஞ்ச ஞானிங்க பேசிக்கிறாங்க.நகர பகுதிகளில் விலங்குகள்!'பெமல்' பேக்டரி உட்பட கோல்டன் சிட்டியின் சுற்றுப்புறத்தில் நுாற்றுக்கணக்கான மரங்கள் பட்டுப்போய் காய்ந்துள்ளன. எந்நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளன.இதை வனத்துறையினர் கவனிக்கவில்லை. சந்தடி சாக்கில் விலை உயர்ந்த மரங்களும் மாயமாகுது. வனப்பகுதியாய் காட்சியளித்த மரங்கள், செடி, கொடிகள் புதர் மயமாக மாறி பாம்புகளின் நடமாட்டமாக உள்ளது.

பறவைகள், மான்கள், மயில்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள் ஆகியவை தீவனங்களை தேடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளன. நகரப்பகுதிகளில் குரங்குகளின் கூட்டமும் குறையவே இல்லை.தங்கவயல், பங்கார்பேட்டை தாலுகாக்களின் வனத்துறை அதிகாரிகள், விலங்குகளை பாதுகாப்பதில் கவனக்குறைவாகவே உள்ளனர்.தெரு நாய்களுக்கு மான்கள் அடிக்கடி விருந்தாகிறது. இதனை தடுக்க வேணும்னு விலங்குகளை நேசிக்கிறவங்க பேசிக்கிறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X