அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா இடைத்தேர்தல் மூன்று சுயேச்சைகள் மனு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை;தமிழகத்தில் காலியாக உள்ள, மூன்று ராஜ்ய சபா எம்.பி., பதவிகளில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பதவிக்கு, நேற்று மனு தாக்கல் துவங்கியது.தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச் 23ல் மரணமடைந்தார்.அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.பி., பதவி காலியானது. பதவி காலம் நிறைவடைய நான்கு ஆண்டுகள் உள்ளன.சட்டசபை

சென்னை;தமிழகத்தில் காலியாக உள்ள, மூன்று ராஜ்ய சபா எம்.பி., பதவிகளில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பதவிக்கு, நேற்று மனு தாக்கல் துவங்கியது.

தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச் 23ல் மரணமடைந்தார்.அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.பி., பதவி காலியானது. பதவி காலம் நிறைவடைய நான்கு ஆண்டுகள் உள்ளன.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அவர்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். அதில், வைத்திலிங்கம் பதவிக்காலம் முடிய ஓராண்டு, கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் முடிய, ஐந்து ஆண்டுகள் இருந்தன. தற்போது, முகமது ஜான் வகித்து வந்த பதவிக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் நாளான நேற்று, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன், மதிவாணன் என, மூன்று பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லாததால், இவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என தெரிந்தும், சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X