சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கேட்டரிங் சர்வீஸ்' நிறுவனத்தில் நகைகள் திருட்டு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
தாம்பரம் : 'கேட்டரிங் சர்வீஸ்' நிறுவனத்தில், தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிச் சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சிட்லபாக்கம், ஹரிதாஸ்புரம், பிரதான சாலையைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி, 24; இவர், ஜோதி நகர், 4வது தெருவில், 'கிருஷ்ணவேணி கேட்டரிங்' என்ற, பெயரில் சமையல் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் நிறுவனத்தை

தாம்பரம் : 'கேட்டரிங் சர்வீஸ்' நிறுவனத்தில், தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிச் சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிட்லபாக்கம், ஹரிதாஸ்புரம், பிரதான சாலையைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி, 24; இவர், ஜோதி நகர், 4வது தெருவில், 'கிருஷ்ணவேணி கேட்டரிங்' என்ற, பெயரில் சமையல் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் நிறுவனத்தை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை, திரும்பி வந்து பார்த்தபோது, நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள 'பீரோ'வில் வைக்கப்படிருந்த 10 சவரன் நகை, வைரக்கல் பதித்த அரை சவரன் டாலர், 200 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவை திருடுபோயின. மேலும், 'மாருதி வேகன்' கார் ஒன்றும் திருடுபோனது.இது குறித்து, சிட்லபாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X