சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடைக்காரர் மீது தாக்குதல்; இணை கமிஷனர் பதிலளிக்க உத்தரவு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை : இறைச்சி கடை ஊழியரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, தெற்கு மண்டல இணை கமிஷனர் பதிலளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, பெரும்பாக்கம் பகுதியில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, பெரும்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ., ஜான் போஸ்கோ, சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, இறைச்சி கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர், முக கவசம் அணியாமல் இருந்து

சென்னை : இறைச்சி கடை ஊழியரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, தெற்கு மண்டல இணை கமிஷனர் பதிலளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, பெரும்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ., ஜான் போஸ்கோ, சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, இறைச்சி கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர், முக கவசம் அணியாமல் இருந்து உள்ளார்.அவரிடம், 'ஏன் முககவசம் அணியவில்லை' என, எஸ்.ஐ., கேட்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து, கடை ஊழியரை எஸ்.ஐ., தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், எஸ்.ஐ., ஜான் போஸ்கோ பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தெற்கு மண்டல இணை கமிஷனருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X