சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ., கட்டிய கட்டடம் இடிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை : சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தில், சட்டவிரோதமாக கட்டிய கட்டடம், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகத்தை ஒட்டி, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இதில், பொதுப்பணித்துறை கட்டி கொடுத்த அலுவலக கட்டடம் உள்ளது.அதோடு சேர்த்து, மாநகராட்சி அனுமதியின்றி சட்டவிரோதமாக கூட்ட அரங்கம் கட்டப்பட்டது.இதை,

சென்னை : சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தில், சட்டவிரோதமாக கட்டிய கட்டடம், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.

சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகத்தை ஒட்டி, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இதில், பொதுப்பணித்துறை கட்டி கொடுத்த அலுவலக கட்டடம் உள்ளது.அதோடு சேர்த்து, மாநகராட்சி அனுமதியின்றி சட்டவிரோதமாக கூட்ட அரங்கம் கட்டப்பட்டது.இதை, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், தன் சொந்த செலவில் கட்டினார். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

சட்டவிரோதமாக கட்டிய கட்டடத்தை மாநகராட்சி இடிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், எம்.எல்.ஏ., அலுவலகத்தை ஒட்டி சட்டவிரோதமாக கட்டிய கட்டடம் இடிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X