பொது செய்தி

தமிழ்நாடு

400 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் 400 இடங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடைபெறும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 25 லட்சத்து 72 ஆயிரத்து 540 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 7,473 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என, 36 லட்சத்து 80 ஆயிரத்து 13 தடுப்பூசிகள்

சென்னை : சென்னையில் 400 இடங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடைபெறும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 25 லட்சத்து 72 ஆயிரத்து 540 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 7,473 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என, 36 லட்சத்து 80 ஆயிரத்து 13 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 1,409 பேருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ஒரு வார்டிற்கு இரண்டு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என, 400 முகாம்கள் நாளை நடைபெற உள்ளன. இதில், 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், மினி கிளினிக்குள், வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் என, ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது.

மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள், ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். எனவே, மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள், நாளை நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி முகாம்கள் குறித்த விபரங்களை, http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X