சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு கனகராஜின் சகோதரரிடம் விசாரணை

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஊட்டி,:-கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம், போலீசார் ஒரு மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ்,
 சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு ,கனகராஜ்,சகோதரர் விசாரணை 

சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு  கனகராஜின் சகோதரரிடம் விசாரணை

ஊட்டி,:-கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம், போலீசார் ஒரு மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர். கோடநாடு கொள்ளையில் தேடப்பட்ட கனகராஜ், 2017 ஏப்., 28ல், சேலம் அருகே சாலை விபத்தில் இறந்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 17ம் தேதி சயானிடம், போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின், கோடநாடு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊட்டியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், நேற்று கனகராஜ் அண்ணன் தனபாலிடம், எஸ்.பி., ஆசிஷ் ராவத், விசாரணை அதிகாரி வேல்முருகன், குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ், ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி, வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில், ஆக., 27ல் விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஆக-202115:08:29 IST Report Abuse
D.Ambujavalli 'அவர்களின்' ரகசியங்கள் புதைக்கப்பட்ட கல்லறையைத் தோண்ட வைக்கப்பட்ட கூலிகளை, வேலை முடிந்ததும் விட்டு வைப்பார்களா? முடித்து விட்டார்கள் ஆனால் வினை, பகை மட்டுமில்லை, கொலையிலும் மிச்சம் வைக்கக்கூடாதென்று தெரியவில்லையே இன்று கிளைத்து வந்துவிட்டது
Rate this:
Cancel
aravindhan - singapore,சிங்கப்பூர்
25-ஆக-202111:13:01 IST Report Abuse
aravindhan அம்மையாரின் புகழ் இப்படித்தான் பல நூற்றாண்டு இருக்குமோ? அவரின் வழி வந்தவர்கள் பல ''வரலாற்று சாதனைகளை'' செய்து மக்களிடம் ''மிக நல்ல பெயரை'' பெற்றுள்ளனர். இதைத்தான் பாஜக தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று பாராட்டியடியதோ? நற்சான்றிதழ் கொடுத்ததும் இதையெல்லாம் பார்த்துதானோ?
Rate this:
Cancel
aravindhan - singapore,சிங்கப்பூர்
25-ஆக-202111:10:57 IST Report Abuse
aravindhan அம்மையாரின் புகழ் இப்படித்தான் பல நூற்றாண்டு இருக்குமோ? அவரின் வழி வந்தவர்கள் பல ''வரலாற்று சாதனைகளை'' செய்து மக்களிடம் ''மிக நல்ல பெயரை'' பெற்றுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X