கோர்ட் செய்தி

தமிழ்நாடு

14ல் ஆஜராக 'மாஜி'க்களுக்கு உத்தரவு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதால், ஆஜராக விலக்கு கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்தது; செப்., 14ல் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. கூட்டறிக்கைஅ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. இவரை கட்சியிலிருந்து நீக்கி, ஜூன் 14ல்

சென்னை:சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதால், ஆஜராக விலக்கு கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை, சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்தது; செப்., 14ல் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

கூட்டறிக்கை

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. இவரை கட்சியிலிருந்து நீக்கி, ஜூன் 14ல் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், 'கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம்' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்தக் காரணம் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரையும் அவதுாறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கோரி, சென்னை எம்.பி., - - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், புகழேந்தி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரையும்ஆஜராக உத்தரவிட்டு, சென்னை சிறப்பு நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பியது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆலிசியா முன், விசாரணைக்கு வந்தது.


நியாயமானது


அப்போது, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில், வழக்கறிஞர் பிரகாஷ் காந்தி ஆஜராகி, ''சட்டசபை நடந்து கொண்டிருப்பதால் இருவராலும் நேரில் ஆஜராக முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவராக இருவரும் உள்ளனர். ''எனவே, ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். ''மேலும், அவதுாறு வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு, உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது,'' என்றார்.

இதற்கு, 'எதிர் மனுதாரர்கள் ஆஜராகாததற்கான காரணம் நியாயமானது தான். இருந்தாலும், முதல் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும். 'தற்போது ஆஜராகவில்லை என்பதை ஏற்க முடியாது என்பதால் அதற்கான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. செப்., 14ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X