பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்குடி சுடுகாடில் 3,150 மரக்கன்றுகள் நடவு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பெருங்குடி : பெருங்குடி சுடுகாடில், 'மியாவாக்கி' திட்டத்தின் கீழ் 3,150 மரக்கன்றுகள் நடப்பட்டன.சென்னை மற்றும் புறநகரில், 'வர்தா' மற்றும் 'நிவர்' புயல் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதை ஈடுசெய்யும் வகையிலும், 'பசுமை சென்னை' என்ற திட்டத்தின் படியும், மாநகராட்சி சார்பில் 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கும் பணி, சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு
 பெருங்குடி சுடுகாடில் 3,150 மரக்கன்றுகள் நடவு

பெருங்குடி : பெருங்குடி சுடுகாடில், 'மியாவாக்கி' திட்டத்தின் கீழ் 3,150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சென்னை மற்றும் புறநகரில், 'வர்தா' மற்றும் 'நிவர்' புயல் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதை ஈடுசெய்யும் வகையிலும், 'பசுமை சென்னை' என்ற திட்டத்தின் படியும், மாநகராட்சி சார்பில் 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கும் பணி, சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலங்களிலும் நடந்து வருகிறது.அந்த வகையில், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்குடி சுடுகாடில்,13 ஆயிரம் சதுர அடி பரப்பில் மியாவாக்கி காடு அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர் முரளி ஆகியோர் கூறியதாவது:பெருங்குடி சுடுகாடு, 92 ஆயிரம் சதுர அடி கொண்டது. அதில், 13 ஆயிரம் சதுர அடியில் மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

'துவக்கம்' எனும் தன்னார்வல அமைப்புடன் இணைந்து, கடந்த நான்கு நாட்களில், 3,150 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இதில், புங்கன், பூவரசு,அகிலம், மந்தாரை, இலுப்பை, நெட்டிலிங்கம், அத்தி என, 42 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தன்னார்வல அமைப்பினர் பராமரிப்பு பணியை மேற்கொள்வர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X