பொது செய்தி

இந்தியா

நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி மீதான போதைப்பொருள் வழக்கில் நெருக்கடி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : போதைப்பொருள் வழக்கில் கைதாகி, பல மாதங்கள் சிறையிலிருந்த நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ரானி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டது, தடயவியல் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.பெங்களூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள்

பெங்களூரு : போதைப்பொருள் வழக்கில் கைதாகி, பல மாதங்கள் சிறையிலிருந்த நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ரானி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டது, தடயவியல் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.பெங்களூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ரானி இவர்களின் கூட்டாளிகள் வீரேன் கன்னா, ரவிசங்கர், ராகுல் தேன்சே உட்பட, பலரை கைது செய்தனர்.

பிரபலமான பலரும் கைதானதால், இவ்வழக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 2020 செப்டம்பர் 14ல் கைதான ராகினி 140 நாட்கள் சிறையில் இருந்தார். கடந்த ஜனவரி 21ல், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஜனவரி 25ல், சிறையிலிருந்து விடுதலையானார்.கடந்த 2020 செப்டம்பர் 16ல் கைதான சஞ்சனா கல்ரானி 56 நாட்கள் சிறையில் இருந்தார்; 2020 டிசம்பர் 11ல், அவருக்கு ஜாமின் கிடைத்தது.போதைப்பொருள் இவர்கள் வெளிநாடுகளிலிருந்து, போதைப்பொருள் வரவழைத்து விற்றது, விசாரணையில் தெரிந்தது.

இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டனரா என்பதை, உறுதி செய்து கொள்ளும் நோக்கில், தலைமுடியை சேகரித்து, ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.தலைமுடி மாதிரி முதன் முறை அனுப்பிய தலைமுடி மாதிரி, விஞ்ஞான ரீதியில் சேகரிக்கப்படவில்லை என, திருப்பி அனுப்பப்பட்டது. எனவே 2வது முறை, தலைமுடி மாதிரி அனுப்பப்பட்டது.இந்நிலையில் தடயவியல் ஆய்வகத்துக்கு, நேற்று அறிக்கை வந்துள்ளது. ராகினி, சஞ்சனா உட்பட, மற்றவர்களும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, சி.சி.பி., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சி.சி.பி., இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:பொதுவாக போதைப்பொருள் உட்கொண்டதை, கண்டுபிடிக்க, ரத்தம், சிறுநீர் மட்டுமே தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆனால் அதில் போதைப்பொருள் உட்கொண்டு ஒன்றிரண்டு நாட்களுக்குள் பரிசோதித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.பல வழக்குகளில் குற்றவாளிகள் கைதாவது தாமதமாகிறது. இதனால் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டதை உறுதிப்படுத்துவது கஷ்டம். அவர்களும் எளிதில் தப்பிவிடுவர்.எனவே, குற்றவாளிகளின் தலைமுடி மாதிரியை, முந்தைய ஆண்டு ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X