சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கு.க., செய்து கர்ப்பமான பெண் பலி உறவினர்கள் மறியலால் பரபரப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராணி, 25. இவரது கணவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துகுமார், 27. கடந்த 2013ம் ஆண்டு, இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, புதுக்கோட்டை அரசு

புதுக்கோட்டை:அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராணி, 25. இவரது கணவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துகுமார், 27. கடந்த 2013ம் ஆண்டு, இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராணிக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. கொரோனா பிரச்னையால், ராணி தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி ராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.அவரை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்த போது, ராணி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கருப்பை குழாயில் கரு வளர்ந்து இருந்ததால், ராணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், நேற்று முன்தினம் காலை அவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டது.

அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராணி உயிரிழந்தார்.'ராணியின் மரணத்திற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம்' என, உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். 'சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரி, உடலை வாங்க மறுத்தனர்.

பின், புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கணேஷ் நகர் போலீசார், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி ஆகியோர் பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X