பொது செய்தி

தமிழ்நாடு

காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் எப்போது?

Added : ஆக 25, 2021
Share
Advertisement
துரைப்பாக்கம் : துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, அரசு நிதி ஒதுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.துரைப்பாக்கம் காவல் நிலையம், 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் சிக்னல் அருகே, 20 சென்ட் பரப்பு இடத்தில், இந்த காவல் நிலையம் உள்ளது.துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகம், துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம்

துரைப்பாக்கம் : துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, அரசு நிதி ஒதுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துரைப்பாக்கம் காவல் நிலையம், 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம் சிக்னல் அருகே, 20 சென்ட் பரப்பு இடத்தில், இந்த காவல் நிலையம் உள்ளது.துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகம், துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவையும், இந்த காவல் நிலைய வளாகத்தில் உள்ளன.ஓட்டு கட்டடத்தில், சாலை மட்டத்தை விட தாழ்வாக உள்ளதால், ஒவ்வொரு கன மழைக்கும், காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுவது வழக்கம்.

இதனால், சுவரும் விரிசல் விழுந்து உள்ளது. மிக குறுகலான இடத்தில் செயல்படுவதால், சேவை மற்றும் விசாரணைக்கு செல்லும் பொதுமக்கள், சாலையில் காத்து நிற்கின்றனர்இந்த இடத்தில், புதிய கட்டடம் கட்ட, போலீசார் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். நிர்வாக குளறுபடி காரணமாக, நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.ஜனவரி மாதம், கட்டடம் கட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.

தற்காலிக, மாற்று இடமும் தேடப்பட்டது. தேர்தல் அறிவிப்பால், நிதி ஒதுக்கும் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டன.இந்நிலையில், காவல் நிலைய கட்டடம் கட்ட, புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X