பொது செய்தி

தமிழ்நாடு

பென்னிகுக் வளாக மரங்களை இடம் மாற்ற நடவடிக்கை துவக்கம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை - நத்தம் ரோட்டில் உள்ள பென்னிகுக் வளாகத்தை கருணாநிதி நுாலகமாக மாற்ற உள்ள நிலையில் அங்குள்ள 20 மரங்களை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சாணத்தால் மூடி பாதுகாக்கப்பட்டுள்ளது.அதி நவீன நுாலகம் அமைப்பதற்காக ரூ.70 கோடி மதிப்பீட்டில் இங்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் 15 - 20

மதுரை : மதுரை - நத்தம் ரோட்டில் உள்ள பென்னிகுக் வளாகத்தை கருணாநிதி நுாலகமாக மாற்ற உள்ள நிலையில் அங்குள்ள 20 மரங்களை இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சாணத்தால் மூடி பாதுகாக்கப்பட்டுள்ளது.அதி நவீன நுாலகம் அமைப்பதற்காக ரூ.70 கோடி மதிப்பீட்டில் இங்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் 15 - 20 ஆண்டுகள் வளர்ந்துள்ள மரங்களை வெட்டினால் தான் கட்டுமான பணிகள் நடைபெற முடியும் என்பதால் அவற்றுக்கு மறுவாழ்வு தர திட்டமிடப்பட்டது.

இதற்காக கோவையைச் சேர்ந்த 'மரங்களுக்கு மறுவாழ்வு' அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர்.அமைப்பின் தலைவர் சையது காட்டுவா கட்டுமான பணி நடக்க உள்ள இடத்தை ஆய்வு செய்தபின் 20 மரங்களை இடமாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:வேம்பு, புங்கன் ரக மரங்களை எளிதில் இடமாற்றலாம். வெப்பாலை, ஓதி மரங்களையும் இடமாற்றியுள்ளோம். இங்கு பெரும்பாலும் இந்த நான்கு வகை மரங்கள் தான் உள்ளன. வரைபட ஆய்வு படி பார்த்தால் 13 மரங்களை மட்டுமே இடமாற்ற வேண்டும்.

புளியமரங்கள் பெரிதாக இருப்பதால் இடமாற்றம் செய்தால் மீண்டும் தழைப்பது கடினம். அவற்றை வெட்ட வேண்டும். மற்ற மரங்களின் கிளைகளை வெட்டி சாணம் பூசி சாக்குப்பையால் கட்டி பாதுகாக்கிறோம்.இந்த மரங்களின் சுற்றி 3 அடி ஆழ அகலத்தில் குழி தோண்டியுள்ளோம். வெட்டும் போது பக்கவாட்டு வேர்கள் காயம்படும். எனவே இயற்கை உரம் துாவி மீண்டும் மண்ணை அணைத்து மூடியுள்ளோம். இப்படியே பத்து நாட்கள் விட்டால் வேர்களின் காயம் ஆறி புதிய வேர்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

இதே வளாகத்திலேயே 100 அடி துாரத்திற்கு கால்வாய் போல பள்ளம் வெட்டியுள்ளாம். 10 நாட்கள் கழித்து மரங்களை எடுத்து புதிய பள்ளத்தில் நட உள்ளோம்.எல்லோரும் தாய் மண்ணை துாவி மரத்தை ஆசீர்வதித்து மீண்டும் தழைத்து வளர வேண்டும் என மரங்களிடம் மானசீகமாக வேண்டுவோம். இந்த விழிப்புணர்வு தான் மற்ற மரங்களையும் பாதுகாக்க வைக்கிறது.தமிழகத்தில் இதுவரை 3000 மரங்களை மறுநடவு செய்துள்ளோம். அதில் திருப்பத்துார் மாவட்டத்தில் அதிகமாக 2000 க்கும் மேற்பட்ட மரங்களை இடமாற்றியுள்ளோம்.

நெல்லை - தென்காசி ரோடு விரிவாக்கத்திற்காக ஏற்கனவே நிறைய மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் கடந்தாண்டு 120 மரங்களை இடமாற்றி காப்பாற்றினோம். இந்தாண்டு 1329 மரங்களை இடமாற்ற திட்டமிட்டுள்ளோம்.நீர் பாதுகாப்பு, ரோடு விரிவாக்கம், விவசாயம், வனத்துறை போன்று மரங்களை இடமாற்றுவதையும் அரசு ஒரு திட்டமாக அறிவிக்க வேண்டும். இதை ஒருதுறையாக கொண்டு வந்து நிதி ஒதுக்கினால் எந்த இடத்திலும் மரங்கள் வெட்டப்படாமல் மீண்டும் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X