சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாசர்பாடியில் பிரபல ரவுடி படுகொலை; 8 பேர் கும்பல் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வியாசர்பாடி : வியாசர்பாடியில் பழிக்குப் பழியாக ரவுடி படுகொலை செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை, வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்.நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அரி, 44; பிரபல ரவுடி. இவருக்கு பவானி என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.கடந்த 2017ல், அரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஆந்திர மாநிலம்
 வியாசர்பாடியில் பிரபல ரவுடி படுகொலை; 8 பேர் கும்பல் கைது

வியாசர்பாடி : வியாசர்பாடியில் பழிக்குப் பழியாக ரவுடி படுகொலை செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்.நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அரி, 44; பிரபல ரவுடி. இவருக்கு பவானி என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.கடந்த 2017ல், அரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஆந்திர மாநிலம் வரதப்பாளையத்தில், ரவுடி பப்லு என்பவரை கொலை செய்தார்.

இதற்கு பழிக்குப் பழியாக, வீட்டு முன் அமர்ந்திருந்த அரியை, நேற்று முன்தினம் இரவு பப்லுவின் நண்பர் சந்தோஷ் உள்ளிட்ட எட்டு பேர் கும்பல், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி தப்பியது.உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அரியை, அவரது தம்பி ரவி, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அரி, நேற்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.இதில், கடந்த 2016ல் வியாசர்பாடி சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி பப்லு, மாமூல் கேட்டு அரியை வெட்டினார். அதற்கு பழியாக, அரி மகன் லாரன்ஸ் கூட்டாளிகளுடன் சேர்ந்து, பப்லுவின் தம்பி ஏழுமலையை வெட்டினார். தொடர்ந்து பப்லு தொல்லை கொடுத்து வந்ததால், 2017ல், ஆந்திர மாநிலம், வரதப்பாளையத்தில் வைத்து, அரி கூட்டாளிகளுன் சேர்ந்து, பப்லுவை கொலை செய்தனர்.

அதற்கு பழிக்குப் பழிவாங்க, பப்லு கூட்டாளிகள் சந்தோஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, அரியை கொன்றது தெரியவந்தது.அரியை கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த பப்லுவின் நண்பரான சந்தோஷ், 38, தமிழ், 26, சஞ்சய், 24, தினேஷ்குமார், 24, சங்கர், 23, வாசு, 19, பிரவீன், 19, அஜித், 24 உள்ளிட்ட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.பழிக்குப் பழியாக ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X