பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை - செங்கோட்டைக்கு ஆக., 30 முதல் சிறப்பு ரயில்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை - செங்கோட்டை இடையே ஆக., 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.மதுரையிலிருந்து சிறப்பு ரயில் (06504) காலை 7:10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் சிறப்புரயில் (06503) இரவு 7:10 மணிக்கு மதுரை வரும். இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு மற்றும்

மதுரை : மதுரை - செங்கோட்டை இடையே ஆக., 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மதுரையிலிருந்து சிறப்பு ரயில் (06504) காலை 7:10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் சிறப்புரயில் (06503) இரவு 7:10 மணிக்கு மதுரை வரும். இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லுார், தென்காசி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.குறைந்தபட்ச கட்டணம் ரூ.30. விருதுநகர் வரை இந்த கட்டணமும், சிவகாசி வரை ரூ.40, ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ரூ.45, ராஜபாளையம் ரூ.50 என உயர்ந்து செங்கோட்டைக்கு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X