சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமாகி 11 ஆண்டுக்கு பின் கணவருடன் சேர்ந்த பெண்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:மனநலம் பாதித்து காணாமல் போன பெண்ணை, 11 ஆண்டு களுக்கு பின் மீட்டு, அவரது கணவரிடம் பெரம்பலுார் போலீசார் ஒப்படைத்தனர். பெரம்பலுார் மாவட்டம் துறைமங்கலம், தீரன் நகரில் இயங்கும் வேலா கருணை இல்ல நிர்வாகிகள் 2015ம் ஆண்டு, பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மனநலம் பாதிக்கப் பட்டு சுற்றித் திரிந்த ஒரு பெண்ணை மீட்டு, தங்களது இல்லத்தில் பராமரித்து வந்தனர்.அந்த
 மாயமாகி 11 ஆண்டுக்கு பின் கணவருடன் சேர்ந்த பெண்

பெரம்பலுார்:மனநலம் பாதித்து காணாமல் போன பெண்ணை, 11 ஆண்டு களுக்கு பின் மீட்டு, அவரது கணவரிடம் பெரம்பலுார் போலீசார் ஒப்படைத்தனர்.

பெரம்பலுார் மாவட்டம் துறைமங்கலம், தீரன் நகரில் இயங்கும் வேலா கருணை இல்ல நிர்வாகிகள் 2015ம் ஆண்டு, பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மனநலம் பாதிக்கப் பட்டு சுற்றித் திரிந்த ஒரு பெண்ணை மீட்டு, தங்களது இல்லத்தில் பராமரித்து வந்தனர்.அந்த பெண்ணுக்கு, தொடர்ந்து மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளாக கருணை இல்ல பராமரிப்பில் இருந்த அப்பெண், கடந்த மாதம் குணமடைந்தார். அவரிடம் பெரம்பலுார் போலீசார் விசாரித்தனர்.தன் பெயர் லட்சுமி, 45; தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நரசய்யாவின் மனைவி என்றும், தனக்கு 3 மகள்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.லட்சுமியின் புகைப் படம், பெரம்பலுார் போலீசார் மூலம், தெலுங்கானா மாநில போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு நடந்த விசாரணையில், நரசய்யா, தன் மனைவி 2010ல் காணாமல் போனதாக, உள்ளூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். போலீசார், அடையாளம் தெரியாத பெண் உடலை நரசய்யாவின் மனைவி எனக் கூறி, அவரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண் உடலுக்கு, நரசய்யா இறுதி சடங்கு செய்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக மனைவி இறந்து விட்டதாக நினைத்திருந்த நரசய்யா, பெரம்பலுார் வந்து, மனைவி லட்சுமியை பார்த்ததும் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

லட்சுமியிடம், மகள்களின் புகைப்படத்தை நரசய்யா காண்பித்தபோது, அந்த போட்டோவை முத்த மழையில் நனைத்தார். பின், போலீசாருக்கும், கருணை இல்ல நிர்வாகிக்கும் நரசய்யா நன்றி தெரிவித்து, மனைவி லட்சுமியை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X