சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கக் கடலில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம் சென்னை அதிர்ந்ததால் மக்கள் பீதி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை:வங்கக் கடலில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சென்னை மற்றும் காக்கிநாடாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. சென்னையில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள், நில அதிர்வை உணர்ந்ததால் பீதி அடைந்தனர்.நாட்டில் 38 பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளவையாக, தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டு உள்ளன.

சென்னை:வங்கக் கடலில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சென்னை மற்றும் காக்கிநாடாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

சென்னையில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள், நில அதிர்வை உணர்ந்ததால் பீதி அடைந்தனர்.நாட்டில் 38 பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளவையாக, தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டு உள்ளன. அதன்படி, ஐந்து மண்டலங்களாக இந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. ஐந்தாம் மண்டலத்தில் இடம் பெற்ற வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், குஜராத், பீஹார் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடங்களாகும்.

திடீர் நடுக்கம்

மூன்றாம் மண்டலத்தில் உள்ள தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் நடுத்தரமான நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும்.அந்த வகையில், நடுத்தர அதிர்வு பட்டியலில் உள்ள தமிழகம் மற்றும் ஆந்திராவில், நேற்று பகலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காக்கிநாடா மற்றும் சென்னையில் நில அதிர்வுகள் பரவலாக உணரப்பட்டன. வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்படும் உயர்ந்த கட்டடங்களில் சில வினாடிகள் லேசான அதிர்வு தென்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் வேகமாக வெளியேறி, சாலைகளில் வந்து நின்றனர்.பொதுமக்கள் பீதிசென்னையில் அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, போரூர், வடபழநி, கோயம்பேடு, அம்பத்துார் என, பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த தகவலை அறிந்து, சென்னை கடற்கரையில் கூடி இருந்த மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து, 'சுனாமி' பேரலை ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், உடனடி தகவலை இணையதளத்தில் வெளியிட்டது. அதில், 'ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு கிழக்கே வங்கக் கடலில் நேற்று பகல் 12:35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. கடலில் 10 கி.மீ., ஆழத்தில் அதன் மையப் பகுதி இருந்தது' என, கூறப்பட்டுள்ளது.


சுனாமி இல்லை

நில அதிர்வு ஏற்பட்ட இடமானது, காக்கிநாடாவில் இருந்து 296; ராஜமுந்திரியில் இருந்து 312; சென்னையில் இருந்து 320; குண்டூரில் இருந்து 339 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால் தான், சென்னையிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தை ஆய்வு செய்த, தேசிய கடலியல் தகவல் மையம், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.புவியின் உள்தட்டில் ஏற்பட்ட நடுக்கம் என்பதால் சுனாமி ஏற்படவில்லை என, சில தன்னார்வ ஆய்வாளர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுஉள்ளனர்.

ஆனால், தேசிய நிலநடுக்க மையம் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.நிலநடுக்கம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவலின்படி, வங்கக் கடலில் சென்னையில் இருந்து 320 கி.மீ., வட கிழக்கே, 10 கி.மீ., ஆழத்தில், பகல் 12:35 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக உள்ளது.

இந்த நில அதிர்வு, சென்னையின் பல இடங்களில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X