பொது செய்தி

தமிழ்நாடு

தரைப்பாலம் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூர் தரைப்பாலம் கால்வாயில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, கொடுங்கையூர், எழில் நகர் தரைப்பாலம் அருகே கால்வாய் செல்கிறது. இதன் அருகே, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கால்வாயின் பெரும் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளும், கோரைப்புற்களும் ஆக்கிரமித்துள்ளன.மேலும், பொதுமக்களால் கொட்டப்படும்

கொடுங்கையூர் : கொடுங்கையூர் தரைப்பாலம் கால்வாயில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, கொடுங்கையூர், எழில் நகர் தரைப்பாலம் அருகே கால்வாய் செல்கிறது. இதன் அருகே, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கால்வாயின் பெரும் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளும், கோரைப்புற்களும் ஆக்கிரமித்துள்ளன.மேலும், பொதுமக்களால் கொட்டப்படும் குப்பையும் ஆகாயத்தாமரை செடிகளுடன் சேர்ந்து கால்வாயை நிரப்பி விடுகிறது.கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆகாயத் தாமரை செடிகள் முழுதுமாக மூடியிருப்பதால், அக்கம் பக்கத்தில் இருந்து அடித்து வரப்படும் குப்பை மற்றும் கழிவுகள் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றன.

இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பூச்சிகளும், வண்டுகளும் இரவு நேரங்களில் படையெடுத்து, வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.இதனால், இப்பகுதி மக்கள் பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளது. இந்நிலையில், ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து கிடப்பதால், மழை நீர் வெள்ளம் வீட்டிற்குள் புகும் அபாயம் உள்ளது.எனவே, மழை வருவதற்கு முன் கால்வாயில் உள்ள ஆகாயத் தாமரை செடிகள், குப்பையை அகற்றி, தண்ணீர் வழிந்தோட வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X