சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் கடன் கொடுக்க வந்தவரிடம் போலீசார் போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சாத்துார் நத்தத்துபட்டி பரமசிவம் 30. பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவரிடம் மதுரை சாமிநாதன் ரூ.5 லட்சம் கடன் கேட்டார். நேற்றுமுன்தினம் மதியம் 12:00 மணிக்கு மதுரை கோகலே ரோட்டில் டீ கடை முன்பு பணத்துடன் பரமசிவம் காத்திருந்தார்.

மதுரை : மதுரையில் கடன் கொடுக்க வந்தவரிடம் போலீசார் போல் நடித்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் நத்தத்துபட்டி பரமசிவம் 30. பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவரிடம் மதுரை சாமிநாதன் ரூ.5 லட்சம் கடன் கேட்டார். நேற்றுமுன்தினம் மதியம் 12:00 மணிக்கு மதுரை கோகலே ரோட்டில் டீ கடை முன்பு பணத்துடன் பரமசிவம் காத்திருந்தார். அவருக்கு துணையாக சாமிநாதனின் நண்பர் சரவணன் நின்றிருந்தார். அப்போது இரு டூவீலர்களில் வந்த 3 பேர், போலீஸ் என்றுக்கூறி பரமசிவத்தின் பையை சோதனையிட்டனர்.

அதில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டவர்கள், 'தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு செல்கிறோம். உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச்செல்லுங்கள்' என்றனர். சரவணனிடம் விசாரிக்க வேண்டும் எனக்கூறி அவரை தங்களுடன் அழைத்துச்சென்றனர்.அருகில் உள்ள தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு பரமசிவம் சென்றபோது, நடந்த சம்பவம் அனைத்துமே 'செட்டப்' எனத்தெரிந்தது. வழிப்பறி குறித்து புகார் செய்தார்.

சாமிநாதன், சரவணன் உட்பட 6 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கன்னத்தில் 'பளார்'போலீசார் கூறியதாவது: பரமசிவத்திடம் சாமிநாதன் இருமுறை சிறிய தொகை கடன் வாங்கி வட்டியுடன் திரும்ப செலுத்தியுள்ளார். ரூ.5 லட்சம் கடன் கேட்டதும் வீட்டை பார்த்துவிட்டுதான் தருவேன் என பரமசிவம் கூறினார். தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் வீடு இருப்பதாக கூறி அவரை சாமிநாதன் அழைத்துச்சென்றார். அப்போது நண்பர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் 'வங்கிக்கு சென்று வந்துவிடுகிறேன். அதுவரை கோகலே ரோட்டில் டீ கடை அருகே சரவணனுடன் காத்திருங்கள்' என பரமசிவத்திடம் கூறிவிட்டு சாமிநாதன் சென்றார். டீ கடை அருகே இருவரும் நின்றிருந்தபோது 'போலீஸ்' என எழுதப்பட்ட இரு டூவீலர்களில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து வந்த மூவர், சரவணனிடம் 'நீ இங்க என்ன பண்ற' என விசாரிப்பது போல் அவரது பையை சோதனையிட்டனர். பின்னர் பரமசிவத்தின் பையையும் சோதனையிட்டனர்.

அதில் ரூ.5 லட்சம் இருந்ததால் 'சரவணா... நீ இன்னும் 'சீட்டிங்' பண்ணிக்கொண்டுதான் இருக்கிறாயா' என கன்னத்தில் 'பளார்' விட்டனர். அருகில் நின்ற பரமசிவத்திடம் 'நீயும் இவன் கூட்டாளியா' என கேட்க, அவர் மறுத்துள்ளார். இதை தொடர்ந்து தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு வருமாறு பரமசிவத்திடம் கூறியவர்கள், சரவணனை அழைத்துக் கொண்டு தலைமறைவாகினர். திட்டம் போட்டு சாமிநாதன், சரவணன் உட்பட 6 பேர் வழிப்பறி செய்துள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவர் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X