பொது செய்தி

தமிழ்நாடு

ரவிச்சந்திரன் பரோல் வழக்கு வேறு மனு செய்ய அவகாசம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவரது தாய் ராஜேஸ்வரி, 'சிறைகளில் கொரோனா பரவுகிறது. அங்கு சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை. ரவிச்சந்திரனுக்கு நீண்டகால அல்லது 2 மாதங்கள் சாதாரண விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்

மதுரை : அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

இவரது தாய் ராஜேஸ்வரி, 'சிறைகளில் கொரோனா பரவுகிறது. அங்கு சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை. ரவிச்சந்திரனுக்கு நீண்டகால அல்லது 2 மாதங்கள் சாதாரண விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு விசாரித்தது.

தமிழக அரசுத் தரப்பு: கொரோனாவை காரணமாகக்கூறி விதிகள்படி விடுப்பு கோர இயலாது. இதை அனுமதித்தால் மற்ற கைதிகளும் உரிமை கோருவர். குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டத்திற்குட்பட்டு வேறு காரணங்கள் அடிப்படையில் மனு செய்தால் அனுமதிப்பதா, இல்லையா என முடிவு செய்யப்படும்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: மனுதாரரிடம் விபரம் பெற அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் அடுத்தவாரம் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X