பாழடைந்த வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிந்தாதிரிப்பேட்டை : சிந்தாதிரிப்பேட்டையில் பாழடைந்த வாகனங்களால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த பாழடைந்த வாகனங்களை, முன்னாள் கமிஷனர்கள் உத்தரவின்படி, மாநகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து அகற்றி வந்தது. சில மாதங்கள் அவற்றை
 பாழடைந்த வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

சிந்தாதிரிப்பேட்டை : சிந்தாதிரிப்பேட்டையில் பாழடைந்த வாகனங்களால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த பாழடைந்த வாகனங்களை, முன்னாள் கமிஷனர்கள் உத்தரவின்படி, மாநகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து அகற்றி வந்தது. சில மாதங்கள் அவற்றை அதிகாரிகள் பின்பற்றினர். அதன்பின் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியுள்ளது.

குறிப்பாக, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, லபான் சாலை நடைபாதை முழுதும் பாழடைந்த வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.அவற்றை அகற்றக்கோரி, அப்பகுதிமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.இன்னும் சில தினங்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X