கன்டெய்னர் மீது மோதல் கார் எரிந்து தம்பதி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னர் மீது மோதல் கார் எரிந்து தம்பதி பலி

Added : ஆக 25, 2021
Share
ஓமலுார்:கன்டெய்னர் லாரி மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், தம்பதி உயிரிழந்தனர். சேலம் மாவட்ட எல்லை தீவட்டிப்பட்டி, 'செக்போஸ்ட்' அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி, தர்மபுரி நோக்கி சென்றது. அப்போது, குறுக்கே நடந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது, கன்டெய்னர் மோதியதில் அவர்

ஓமலுார்:கன்டெய்னர் லாரி மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், தம்பதி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்ட எல்லை தீவட்டிப்பட்டி, 'செக்போஸ்ட்' அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி, தர்மபுரி நோக்கி சென்றது. அப்போது, குறுக்கே நடந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது, கன்டெய்னர் மோதியதில் அவர் இறந்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துாரில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற காரில், பொன்மலை, 65, மற்றும் அவரது குடும்பத்தினர் என ஐந்து பேர் பயணித்தனர். முன்னால் சென்று விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரி திடீரென நிறுத்தப்பட, பின்னால் வந்த கார், கன்டெய்னர் மீது மோதியது.காரில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

சிறிது நேரத்தில், கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது. தீவட்டிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீக்காயமடைந்த பொன்மலை, அவரது மனைவி சகுந்தலா, 56, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.அவர்களுடன் வந்த நித்யகுமார், 28; ஷோபனா, 35; மித்ரன், 5, ஆகியோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X